பக்கம்:ஓ மனிதா.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

ஓ, மனிதா!

பலன்—உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் தண்டனைகள் உங்களுடைய குற்றங்களைக் குறைப்பதாகத் தெரியவில்லை; மாறாக அதிகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. வேண்டுமானால் கோர்ட்டுக்குப் போய்க் கொஞ்ச நேரம் நின்று பாருங்கள்; குற்றவாளிகளில் பலர் முதல் தடவையாக மட்டும் அல்ல, முப்பதாவது தடவையாகவும் சிறைக்குப் போய்க் கொண்டிருப்பார்கள்!

ஓ, மனிதா! இதைவிட ஒரு வேடிக்கை, இதைவிட ரசமான ஒரு பொழுது போக்கு வேறு ஏதாவது இருக்க முடியுமென்று நீ நினைக்கிறாயா?—நிச்சயமாக இருக்க முடியாது.

அதனால் தான் இந்த மாதிரி வம்புகளுக்கெல்லாம் நாங்கள் போவதில்லை: எங்களுக்கிடையே உள்ள ‘சமூக விரோதி’களை அவ்வப்போது விரட்டி விடுவதோடு நாங்கள் நிறுத்திக் கொண்டு விடுகிறோம். யார் அந்த விரோதிகள் என்கிறாயா? சொல்கிறேன்; உங்கள் முகத்தில் அடிக்கடி விழித்துக் கொண்டிருப்பதால்தானோ என்னவோ, எங்களிலும் சிலர் இப்போது திருடர்களாகி இருக்கிறார்கள். அவர்களில் பகல் திருடர்களும் உண்டு; இராத்திருடர்களும் உண்டு. பகல் திருடர்களிடமிருந்து மற்றப் பறவைகளின் முட்டைகளையும், குஞ்சுகளையும் காக்கும் பொறுப்பைக் கரிச்சான் குருவி ஏற்கிறது. இராத் திருடர்களிடமிருந்து காக்கும் பொறுப்பை நான் ஏற்கிறேன்.

அதாவது, கரிச்சான் குருவி ‘டே வாட்ச்மேன், நான் ‘நைட் வாட்ச்மேன்’ இரவில் பாம்பையோ, பூனையையோ கண்டு நான் அலறுவது மற்றப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/55&oldid=1370797" இருந்து மீள்விக்கப்பட்டது