பக்கம்:ஓ மனிதா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

ஓ, மனிதா!


வள்ளுவர் நிலை அப்படியல்ல; அவர் இந்தக் காலத்துப் ‘பெரிய மனிதர்கள்’ சிலரைப் போல அக்தக் காலத்திலேயே பிழைக்கத் தெரிந்தவர். ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்’ என்று சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்லிவிட்டுத் தம்மைப் பொறுத்தவரை ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூடத் தேறாது’ என்ற பொன் மொழிக்கு உரித்தான உழவுத் தொழிலை ஏற்காமல், ‘நெய்யுந் தொழிலுக்கு நேரில்லை கண்டீர்’ என்று நெய்யும் தொழிலை ஏற்றவர். அவர் என்ன சொல்கிறார் ஜாதியைப் பற்றி? - ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்று அப்படியும் சொல்லாமல் இப்படியும் சொல்லாமல் பொதுப்படையாக ஏதோ சொல்லிவிட்டு, அந்தப் பிரச்னையிலிருந்தே மெல்ல நழுவிவிடுகிறார்.

மனிதர்களான நீங்கள் இப்படி; நாய்களான நாங்களோ?...

எதையும் இப்படி மூடி மறைப்பதும் கிடையாது; எதிலிருந்தும் இப்படி நழுவுவதும் கிடையாது.

எங்கள் குலம் நாய்க் குலம்தான். அந்தக் குலத்துக்கென்று ஒரு தனிக் குணமும் உண்டுதான், அந்தக் குணத்தை ஊரை ஏமாற்றுவதற்காக நாங்கள் செயற்கையாக்கிக் கொண்டுவிடுவது கிடையாது; இயற்கையான குணத்தை இயற்கையானதாகவே வைத்துக் கொண்டிருக்கிறோம். இதில் என்ன தப்பு?

உங்களைப் போலவே நாங்களும் அல்சேஷன், ராஜபாளையம், அது இது என்று ஜாதியால் பிரிந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/75&oldid=1369735" இலிருந்து மீள்விக்கப்பட்டது