பக்கம்:ஓ மனிதா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோழி கேட்கிறது

83

இப்போதெல்லாம் நீங்கள் சண்டைக்கு என்னையோ, ஆட்டையோ தேடுவதில்லை; உங்களில் இருவரையே தேடி எடுத்துக்கொண்டு விடுகிறீர்கள். அவர்களை மாமிசமலை போல் ஊட்டி வளர்க்கிறீர்கள். ‘குஸ்தி’ என்னும் பேரால் அவர்கள் இருவரையும் மேடையில் ஏற்றி, ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துத் தூக்கிக் கீழே எறியவிட்டோ, குத்துச்சண்டை என்னும் பேரால் ஒருவர் முகத்தை ஒருவர் குத்திக் கிழிக்க விட்டோ வேடிக்கை காட்டுகிறீர்கள்; அந்த வேடிக்கையைப் பார்க்க ஐந்து ரூபாய் டிக்கெட்டும், பத்து ரூபாய் டிக்கெட்டும் வாங்கிக் கொண்டு ஆயிரம் பேர் பதினாயிரம் பேர் என்று கூடுகிறீர்கள்.

‘ஆகா!’

‘வாரே வா!'

‘சபாஷ்!’

‘அப்படிப் போடு!’

‘இப்படிப் போடு!’

‘மார்வெலஸ்!’

‘ஒண்டர்ஃபுல்!’

என்ன உற்சாகம், என்ன கை தட்டல்!

இவர்களெல்லாம் யார்? மொழியாலோ, நாட்டாலோகூட வேறு பட்டவர்கள் அல்ல; எல்லாவற்றாலும் ஒன்றுபட்டவர்கள். உடன் பிறந்த உறவு முறை கொண்டாடுபவர்கள். இவர்களில் ஒருவர் இன்னொருவரைத் தூக்கிக் கீழே விட்டெறிவது வேடிக்கையா? ஒருவர் முகத்தை ஒருவர் குத்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/84&oldid=1370999" இலிருந்து மீள்விக்கப்பட்டது