பக்கம்:ஓ மனிதா.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

ஒ, மனிதா!

கிழித்துக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட நிற்பது தமாஷா?

இதுவா உங்கள் மனிதாபிமானம்? இதுவா உங்கள், மனிதத் தன்மை? இதுவா உங்கள் மனிதப் பண்பு?

சுய புத்தியுடனா இதை நீங்கள் செய்கிறீர்கள்?— இல்லை; உங்களுக்கெல்லாம் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது!

இப்படியல்லவா நினைக்க வேண்டியிருக்கிறது நாங்கள்?

‘குஸ்தியும் குத்துச் சண்டையும் சும்மா ஒரு விளையாட்டுக்குத்தானே?’ என்று நீங்கள் சொல்லலாம். அந்த விளையாட்டை யார், யாருக்காக விளையாடுவது?

அந்தக் காலத்து ராஜாக்கள் பொழுது போகவில்லை என்றால் இரண்டு அடிமைகளைக் கூப்பிட்டு அவர்களில் ஒருவன் இன்னனொருவனால் கொல்லப்படும் வரை குஸ்தியிடச் செய்வார்களாம்; குத்துச் சண்டை போடச்சொல்வார்களாம். அப்படியும் அவர்களில் ஒருவனும் சாகவில்லை என்றால், அவர்கள் இருவரையுமே கூண்டில் ஏகப் பசியோடு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிங்கத்துக்கோ, புலிக்கோ இரையாக்கி அவர்கள் வேடிக்கை பார்த்து ரஸிப்பார்களாம். அந்த மாதிரி வேடிக்கையையா நீயும் பார்க்க விரும்புகிறாய்?

பார்—இந்த ஜனநாயக யுகத்தில்தான் நீயும் ‘இந்த நாட்டு மன்னன்’ என்று பெயரளவிலாவது சொல்லப்படுகிறயே? பார், நன்றாய்ப் பார்! மனிதனா நீ தேவனாகாவிட்டாலும் நிச்சயம் சைத்தானாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/85&oldid=1371001" இருந்து மீள்விக்கப்பட்டது