பக்கம்:ஓ மனிதா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12. நரி கேட்கிறது

“நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி, என்று நீங்கள் சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்வீர்களே தவிர என்னைக் கண்டதும் ஒதுங்கி விட மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் அல்லும் பகலும் அனவரதமும் உங்கள் எதிர் கால நல்வாழ்வுக்காக நீங்கள் வேண்டிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்ட தேவதையே உங்கள் முடிவுப்படி வேறெங்கும் குடியிருக்க இடம் கிடைக்காமல் என் முகத்தில்தானே குடியிருக்கிறாள்? இல்லாவிட்டால் ‘காகம் உட்காரப் பனம் பழம் விழுந்தது’ போல் எவனுக்காவது என்றைக்காவது எதிலாவது அதிர்ஷ்டம் அடித்து விட்டால் ‘அவன் இன்றைக்கு நரிமுகத்தில விழித்து இருப்பான்!’ என்று நீங்கள் அந்த நாளிலிருந்து இந்த நாள் வரை அத்தனை நம்பிக்கையோடு சொலலிக் கொண்டிருப்பீர்களா?

நீங்கள்தான் இப்படியென்றால் உங்களை ஆளும் அரசாங்கத்தாரும் உங்களைப்போலவே ‘உழைப்பில் நம்பிக்கை வையுங்கள்' என்று சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்கிறார்களே தவிர உண்மையில் அதிர்ஷ்டத்தில உங்களுக்குள்ள கம்பிக்கையை மேலும் ஊக்குவித்தே வருகிறார்கள். அதற்காகவே மற்றத் திட்டங்கள் எப்படியாவது போகட்டும் என்று அவர்கள் லாட்டரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/86&oldid=1371005" இலிருந்து மீள்விக்கப்பட்டது