பக்கம்:ஓ மனிதா.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

ஓ, மனிதா!

முடிவு—இப்போதும் இல்லை; எப்போதும் இல்லை.

இதற்கிடையில் ‘ஏமாறாதே ஏமாற்றாதே’ என்று என்னையும் உன்னையும் பார்த்து சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் நம்மை விட புத்தி சாலிகள் என நீ நினைக்கிறாயா? அதுவும் இல்லை. அப்படிச் சொல்லி அவர்கள் தாங்கள் பிழைப்பதற்காக ஒரு பக்கம் ஏமாந்து கொண்டும் இன்னொரு பக்கம் ஏமாற்றிக கொண்டும் தான் இருக்கிறார்கள்.

இதுவே உண்மை.

தந்திரத்தில் வேண்டுமானால் ‘ராஜதந்திரம்’ என்று ஒன்று இருக்கலாம். பொய்யில் ‘அரிச்சந்திரன் பொய்’ என்று ஒன்று உண்டா என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/93&oldid=1371036" இருந்து மீள்விக்கப்பட்டது