பக்கம்:ஔவையார் கதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஔவையார் கதை

9


வசனம்

யாளிதத்தனும் அவன் மனைவியும் தாம் பெற்றெடுத்த பெருந்தவக் குழந்தையைப் பேணி வளர்த்து வந்தார்கள். குழந்தையும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து மூன்றாண்டுப்பருவம் அடைந்தது. பெண்குழந்தையாக இருந்தாலும் அதன்பால் கண்ட தெய்வங்கலங்களால் அளவற்ற மகிழ்ச்சியுடன் கண்ணுங் கருத்துமாய்க் காத்து வளர்த்தார்கள். குழந்தையின் மழலை மொழிகேட்டு உள்ளம் குளிர்ந்தார்கள். ஆடியசைந்து வரும் இளநடைகண்டு இன்பம் கொண்டார்கள். இங்ஙனம் இன்புற்று அன்புற்று வாழ்ந்துவரும் நாளில், குழந்தையின் தாய் நோய்வாய்ப்பட்டு இறக்குந் தறுவாயில் இருந்தாள். ‘முந்தித் தவங்கிடந்து, முந்நூறுகாட்சுமந்து, அந்திபகலாச் சிவனே ஆதரித்துத், தொந்திசரிய நொந்து பெற்ற நந்தவக் குழந்தையை நன்கு பேணி வளர்ப்பாரில்லையே! யான் இறந்தால் தாயில்லாக் குழந்தையாகத் தவிக்குமே!’ என்று, அத் தாய் வருந்திப் புலம்பினாள். அவளது வருத்தத்தைக் கண்ணுற்ற குழந்தை, தாயின் பக்கத்திலே சென்று அவளது கண்ணிரைத்துடைத்து, அவளை நோக்கி,

“இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
விட்டசிவ னுஞ்செத்து விட்டானோ-முட்டமுட்டப்
பஞ்சமே யானலும் பாரமவ னுக்கன்னாய் !
நெஞ்சமே அஞ்சாதே நீ”

என்ற பண்ணமைந்த பாட்டைப்பாடி, அவளைத் தேற்றியது. தன்னைத் தேற்றிய தனிப்பெருங் குழந்தையின் இனிப்பான ஆறுதல் மொழியைக்கேட்ட தாய் —அதிலும பாட்டாகப் பாடித் தேற்றிய குழந்தையின் ஆற்றலைக் கண்ட தாய் உண்மையாகவே கவலையொழிந்தாள். இது தெய்வக் குழந்தை இதைப்பற்றி நாம் கவலைகொள்ள வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/9&oldid=507899" இலிருந்து மீள்விக்கப்பட்டது