பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

ஔவையார் தனிப்பாடல்கள்



"தாயே! நன்றி மறந்த உலகம் இது. அன்று நல்லுடலுடன் இருந்தேன். என்பாற் செல்வ வளம் பெருகி இருந்தது. என்னைக் காண்பதற்குக் காத்திருந்தோர் பலர். என் உறவினர் என்று பெருமைப்பட்டுக் கொண்டவரும் பலர்.

இன்றோ! என் செல்வங்கள் போயின. என் போதாத வேளை! என் காலும் நொண்டியாகப் போயிற்று. என்னைக் காணக் காத்திருந்த உறவும் சுற்றமும், நான் சென்று காண முயன்றபோதும் கதவடைத்துத் தாளிடுகின்றனர்.

அன்று உலகைப் புரியாதவன் நான். செல்வச் செருக்கால் தலை நிமிர்ந்து நடந்தேன். இன்றோ, உலகினைப் புரிந்து கொண்டேன். அதனைவிட்டு ஒதுங்கி நிற்கின்றேன் என்று தன் கதையைக் கூறினான் அவன். அவன் கண்கள் கலங்கின. ஒளவையாரின் உள்ளமும் கசிந்தது.

அவருடைய நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது உலகத்தின் போக்கு அதன் போலித்தகைமையை நினைந்து வருந்தினார்.

உடையராய்ச் சென்றக்கால் ஊரெல்லாம் சுற்றம்
முடவராய்க் கோலூன்றிச் சென்றக்கால் சுற்றம்
உடையானும் வேறு படும்.

என்றுசொல்லி அவனைத் தேற்றினார். இவனும் மனத்தெளிவு கொண்டு அவரைப் போற்றினான். பின்னர், ஒளவையாரின் முயற்சியினால், அவனுடைய வாழ்வுக் கவலை ஒழியவும் செய்தது.

"வளமும் நலமும் உடையவர்களாகச் சென்றனரானால் ஊரெல்லாம் சுற்றமாகத் திகழ்ந்து அவரை உபசரிப்பார்கள். முடவர்களாகக் கோலூன்றியபடி இரவலராகச் சென்றால், சுற்றத்தினை உண்மையாகவே உடையவனும்கூட, வேறு நிலைக்கே உட்பட நேரும்” என்பது பொருள்.

102. பொன் பெற்றேன்!

புகார் வணிகர்களுள் பந்தன் என்னும் பெயரினன் ஒருவன் இருந்தான். இவன் வணிகம் பெருக்கிப் பொன்னினை நிறைத்ததோடு மகிழ்ந்தவன் அல்லன். தமிழ்நலம் துய்த்துத் தமிழறிந்த சான்றோர்களின் ஏழ்மையைப்போக்கி, அவரைப் பொன்னுடையவராகத் செய்து புகழ் பெற்றவனும் ஆவான்.

ஒரு சமயம், ஒளவையாருக்குப் பொன் வேண்டியதிருந்தது. பந்தனின் சிறப்பினைப் பலர் சொல்லக் கேட்டிருந்த அவர், அவனைக் கண்டுவருகின்ற நினைவுடன் சென்றார். ஒளவையாரின் புகழினைக் கேட்டு, அவரைக் காண்பதற்கு முன்பாகவே அவர்பால்