பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

21


அறிந்துகொண்டதை அறியச் செய்தால் ஊர் பழிக்குமே என்று கருதியாவது அவள் சீற்றத்தை நிறுத்துவாள் என்று நினைத்தார்.

இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன்வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்.

என்று அவளும் கேட்குமாறு உரத்த குரலிற் பாடினார்.

அந்தப்பாட்டினைக் கேட்டதும், அந்தப் பழிகாரி அப்படியே செயலற்று நின்றுவிட்டாள். "எவரோ பெரியவர் போலிருக்கிறது! சாபம் ஏதாவது கொடுத்துவிட்டால் என்ன செய்வது?" என்று நினைத்து நடுங்கினாள்.

"அவரை உள்ளே அழைத்து வா, சோறு போடுகின்றேன்” என்று தன் கணவனிடம் கூறினாள்.

கணவனும் சற்றுமுன் நடந்ததை எல்லாம் மறந்தவனாக மகிழ்வுடன், ஒளவையாரை உண்ண அழைப்பதற்கு வந்தான். பின்னும் நடப்பதை அறிய விரும்பிய அவரும் உள்ளே சென்றார்.

“அருகே அமர்ந்து அவளுடைய முகத்தைச் சீர் செய்து விட்டான். ஈரோடு பேனையும் தலையினின்றும் எடுத்தான். விருந்து வந்திருக்கிறது என்றும் சொன்னான். சொல்லவும், அவள் மிகவும் வருந்தினாள். சினத்தால் கூத்தாடினாள். அவன்மீது வசை பாடினாள். வெறிகொண்டவளாக ஆடி, அவனைப் பழ முறத்தால் ஓடஓடப்புடைத்தாள்” என்பது பாட்டின் பொருள். 'இப்படியுமா ஒரு பெண்’ என்பது ஒளவைத்தாயின் ஏக்கம்.

13. அமுதும் அன்பும்!

சித்தீ மிகவும் கொடியது. 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்' என்பார்கள். ஒளவையாரையும் பசித்தீ அப்போது பெரிதாக வாட்டிக் கொண்டிருந்தது. அதனாலும், அந்தக் கணவனின் நல்ல உள்ளத்திற்குக் கட்டுப்பட்டும், அவர் அவன் வீட்டினுள் சென்று அமர்ந்தார்.

அந்தக் கணவனுக்கு ஒரே மகிழ்ச்சி, எப்படியோ இந்த அம்மையை உண்ணச் செய்துவிட்டோம் என்ற மனநிறைவு அவன் முகத்தில் ஒளி வீசியது. அந்த அகங்காரி உணவு பரிமாறினாள். அவள் உணவு இட்ட முறையும், நடந்து கொண்ட தன்மையும், வெறுக்கத்தக்க விதமாகவே இருந்தது.

ஒளவையார் அன்புக்கு எளியராவார். ஆனால் அகம்பாவத்திற்கு அவர் என்றும் பணிந்ததில்லை. அவர் உள்ளம் அனலாகக்