பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

ஔவையார் தனிப்பாடல்கள்


மனம் இப்படிப்புண்படும் என்பதனை அறியாது கேட்டுவிட்டேன். என்னைப் பொறுத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு, வெளியே செல்லத் தொடங்கினார்.

அந்தப் பெண், அவரை உள்ளே அழைத்தாள்; தன் சோகக் கதையைக் கூறத் தொடங்கினாள்;

"என் பெயர் சிலம்பி தாசித் தொழில் செய்து வந்தேன். நான் ஏழையானாலும், என் உள்ளம் தமிழ்ப்பாக்களை விரும்பியது. தமிழ்ச் செய்யுட்களை ஆர்வமுடன் கற்று மகிழ்வேன். அந்த ஆர்வத்தால், ஒரு மடமையான செயலையும் செய்துவிட்டேன்.

"கம்பரின் செய்யுட்கள் இப்போது நாட்டில் பெரிதும் மதிக்கப் பெறுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் வாயால் என்னைப் பற்றி ஒரு செய்யுளைப் பாடச் செய்து கேட்க வேண்டும் என்று விரும்பினேன். விருப்பம் வளர்ந்து, தீராத ஆசையாகவும் உருவெடுத்தது.

என்னிடமிருந்த பொன்னையும் பொருளையும் எடுத்துக் கொண்டேன். ஐந்நூறு பொன்கள் தேறின. அவற்றைக்கொண்டு கம்பர் பாதங்களில் காணிக்கையாகச் செலுத்தி, அவரிடம் என் விருப்பத்தைக் கூறிப் பணிந்தும் நின்றேன்.

அவர் ஆயிரம் பொன்னுக்கு ஒரு பாட்டுப் பாடுகிறவராம். ஐந்நூறு பொன்னுக்கு ஓர் அரைப்பாட்டினை எழுதித் தந்து, எஞ்சிய தொகையைக் கொடுத்தால், செய்யுளை முடித்துத் தருவதாகக் கூறிவிட்டார். என் வேண்டுகோள் எதுவும் பயன் தரவில்லை. அந்தப் பாதிப்பாடல்தான் அது. என்னைப் பற்றி அதில் ஒரு சொற்கூட இல்லை!

என் தோல்வி என் உள்ளத்தைச் சிதைத்து விட்டது. என் உடலும் உள்ளமும் மிகவும் சோர்ந்து போயிற்று. இன்னமும் ஐந்நூறு பொன்னுக்கு நான் எங்கே போவேன்?”

சிலம்பியின் கதை ஒளவையாரையும் கண் கலங்கச் செய்தது. அவளைத் தேற்றி அந்தச் செய்யுளின் பாதியைத் தாமே பாடி அவளை மகிழ்வித்தார். அவளுடைய அன்பும் உபசரிப்பும் அவரைத் திணறும்படிச் செய்தன. அந்தச் செய்யுள் இது.

தண்ணிருங் காவிரியே! தார்வேந்தன் சோழனே
மண்ணா வதுஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு.

"தண்ணிய நீர் எனப் போற்றப்பெறுவது வளமுடைய காவிரியின் நீரேயாகும். வெற்றிமாலை பூண்ட வேந்தன் எனப்