பக்கம்:கங்கா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1? இவைகள் ஒவ்வொன்றுக்கும் நாற்பதுவயது தாண்டியதே. ಡ್ಗಿ? இன்ைతా வயதில் 醬 மேலானவை, என் குழந்தைகள், ஆனால் நீங்கள் வளர்த் தவை: இவை குழந்தைகளில்லை. பெற்ற ஆர்வத்தில் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொள்ளலாம். அப்படித்தான் இப்போது பார்க்கிறேன். எழுத்தாளனுக்குத் தாயகம் இருக்கலாம், ஆனால் எழுத்துக்குக் கிடையாது. எழுத்து ஒரு எடுப்பார்"கைப் பிள்ளை என்று வேறு இடத்தில் எழுதியிருக்கிறேன். எங்கெங்கோ, எப்படியெப்படியோ வளர்ந்தாலும் இவை நோஞ்சான்களல்ல. நன்றாக செழிப்பாகவே, தாமாவே வளர்ந்திருக்கின்றன. இல்லாவிடில் தங்கா", குருக்ஷேத்ரம், கஸ்தூரி', 'விடிவெள்ளி’, ‘தீக்குளி என்று இவை இன்னும் பேசப்படுமா?'சொல்' எனும் முன்னுரை தன் வழியில் தனி பிரசித்தி அடைந்துவிட்டது-வேண் டாம், இனியும்ா சுயபுராணம், இனியும்ா இன்வகளுக்கு என் அர்வணைப்பு? ஆனால் ஒன்று. ஒ குடும்பத்தின் பெண்டு பிள்ளைகள் எங்கெங்கு சித்றியிருந்தாலும், ஒரு விசேஷ் தினத்தன்று-தீபாவளி, வருடப்பிறப்பு, வீட்டுப் பெரிய் வனுக்கு ஏதேர்_விழாவென்று குடும்பம் ஒன்று கூடும்போது அந்த மறு சந்திப்பின் மகிழ்ச்சியே தனித்ான். குழந்தைகள் வருகிறார்கள். அணைக்க் இருக்ைகள் போதிவில்ல்ையே! ஏடுகளிடையே அமுக்கி வைத்திருந்த தாழம்பூவின் மணம் கமகமக்கிறது. குழ. கதிரேசன் இந்தச் சமயத்தை ஏற்படுத்தி அதன் ம்ஹிம்ையைத் தட்டிக்கொண்டு போய் விட்டார். அதுவும் சரிதான். ஸ்ாஹித்ய அகாதெமி விருது கிடைத்திருக்கும் இந்தச் சமயத்தில், இரண்டாம் பதிப்பை வெளியிட்டிருக்கும் ஐந்தினைக்கு நன்றி. எல்லாரும் பண்டிகையில் பங்குகொள்ள வாருங்கள் நீங்கள் வளர்த்த குழந்தைகள். Plot. 242, 1, கிருஷ்ணன் தெரு, ஞானமூர்த்தி நகர் அம்பத்துரர் லா. ச. ராமாமிருதம் சென்னை-600 053 #5–6–1990

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/13&oldid=764304" இலிருந்து மீள்விக்கப்பட்டது