பக்கம்:கங்கா.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

கங்கா


பாண்டிய ராஜகுமாரி. அவளையும் மீறி, சமயத்திற்கு அவளுள் எழுந்த சக்திதான் காரணமோ, வைத்தியத்தின் சாமர்த்தியமோ, அவனுடைய பலம் தானோ பெரியவர்களின் ஆசியோ அகஸ்மாத்தோ ஒருவாறாக, அவன் தன்மேல் கவிந்த கருமேகத்தின் _ தழுவலினின்று மீண்டான். ஆயினும் எப்படிப்பட்ட மீட்சி ! ஆஸ்பத்திரியில் இருந்தவரை கூடத் தெரியவில்லை. விடுதலையடைந்து வீட்டுக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது. பழரஸம் பிழிந்தோ, மருந்தோ ஏதோ எடுத்துவரக் கீழே போன கெளரி மறுபடி மாடியேறி வந்தபோது அசப்பில் அவன் நிலைகண்டு அயர்ந்து நிலை வாசல்மேல் அப்படியே சாய்ந்தாள். பகீர் என்றது. அவன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து சுவரைப் பார்த் துக் கொண்டிருந்தன் முகத்திலும், அத்திலும், கழுத் திலும் தழும்புகள் வீறுவீறாய்த் தடித்து எழும்பின.புருவங் களும் கண் ரப்பைகளும் இருந்த இடம்கூடத் தெரியாது. தீய்ந்து போயிருந்தன. உயிருக்கும் சாவுக்கும் ஒரு வருடமாய் நடந்த போர்க் களமாய் உடல் விளங்கிற்று. உயிர் உடலோடிருந்ததால் :ன் வெற்றி என்றாலும் சாவு எப்படியும் உடல் எனக்குத்தான் சொந்தம் என்று ஸ்தாபிப்பதுபோல் தன் முத்திரையை உடலெங்கும் பொறித்திருந்தது. -கெளரி திருப்திதானே ?" என்று ஒருகுரல் அவளுள் திடுக்கென எழுந்ததும் அது பேசியே கேட்டதுபோல் இெளரி சுற்றுமுற்றும் விழித்துப் பார்த்து, விதிர்விதிர்த்துப் போனாள். அவளால் அங்கு நிற்க முடியவில்லை. கைச் சாமானுடன் தடதடவெனக் கீழேயிறங்கி, உக்கிராண உள்ளில் ஓடோடியும் போய் அதன் இருளில் சரண்புகுந் தாள். தன்னின்று தனக்குத்தானே தன் குரல் கேட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/130&oldid=1283333" இலிருந்து மீள்விக்கப்பட்டது