பக்கம்:கங்கா.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

கங்கா


"உஷ், கொஞ்ச நாழி பேசாதிருங்கோ... “எனக்கு ஒத்தரும் இல்லை. இந்தத் தள்ளாமையில் அவன் இட்ட பிச்சைன்னு நினைச்சு மகிழ்ந்திண்டிருந் தேன். அதுகூட அவனுக்கு பொறுக்கல்லே. அவ்வளவு கர்வமா உனக்குன்னு இட்ட கையாலயே பிடுங்கிண்டு போயிட்டான்.” "பாட்டி, அதெல்லாம் சொல்றதில் என்ன பிரயோ சனம் ? கொஞ்ச நாழி பேசாதேங்கோ. உட்ம்பு உதறல் அடங்கட்டும். என்னவோ திடீர்னு ஆசையாயிருக்கு: ஒரு பட்டாசு கொளுத்தட்டுமா ?” "தாராளமா எடுத்துக்கோயேன். உனக்குன்னுதானே கொண்டு வந்தேன் !” "என்ன பாட்டி கேலி பண்றேளே ?” "ஏன், அதுக்குள்ளே மறந்துட்டியா ? நீ தானே சொன்னே. உன் வயசிலே எனக்கு ஒரு பேரன் இருக்க லாம்னு ?” "பலே, நன்னா மடக்கறேளே !” "மடக்கல்லே. உண்மையே அதுதானே ! என்ன் முழி முழின்னு முழிக்கிறே?" "ஒண்ணுமில்லே,” "என்னை சொல்லிட்டு உன் கன்னம் நனைஞ்சிருக்கு. அழாதே." "இல்லை பாட்டி, அழல்லை. கண் அழுக்கு கரை யறது கலிக்கமாத் தெரியறது.” "என்ன தெரியறது ?" "இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் எதிலேதான் அர்த்தம் இருக்கிறதென்று நினைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/156&oldid=1283349" இலிருந்து மீள்விக்கப்பட்டது