பக்கம்:கங்கா.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கங்கள் ஹரிஹரன் கல்லாவுக்கெதிரே நின்றான். மணி ஐயருக்கு நாக்கு மேல்வாயை முட்டுகிறதேயொழிய, வார்த்தை வரமாட்டேன் என்கிறது. "பில் புஸ்தகத்தை இங்கே வை !” ஹரிஹரன் பேசாமல் அப்படியே வைத்தான். "பென்சிலை வை : அதுவும் ஆயிற்று. "வெளியே போ- போயிடு-இங்கே நிற்காதே ஒற்ரிஹரன் சற்று நேரம் தெருவில் அலைந்து கொண்டிருந்தான். அவனுக்குக் காற்றாட லெளகரிய மாயிருந்தது. பக்கத்து வெற்றிலை பாக்குக் கடையில் வெற்றிலை போட்டுக் கொண்டான். - வேலை ? ? ஓ ! வேலையா ? அதைப்பற்றி அவனுக்குக் கவலை யில்லை. அவனைவிட்டால், மணி ஐயனுக்கு வேறு கதியில்லை : மணி ஐய்யனை விட்டால், அவனுக்குக் கதியில்லை. இம்மாதிரி இரண்டு, மூன்று மாதங்களுக் கொருதடவை நேர்வதுண்டு. இந்த வேலைக்குத்தான் மானம், வெட்கம், ரோசம், விவஸ்தை ஒன்றும் கிடை யாதே ! அபிஷேக சுந்தரர் வெளியில் செல்லும் வரையில் ஹரிஹரன் சற்றுத் தலைமறைவாயிருந்தான். அவர் போன பிறகு, சற்றுத் தைரியமாகவே ஹோட்டல் வாசற் படியண்டை உலாவ ஆரம்பித்தான். ಕ್ಯTLು ங்கால வேளை முற்ற முற்ற, உள்ளே கூட்டம் நெரிந்தது. "ஹரிஹரா !”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/164&oldid=764342" இலிருந்து மீள்விக்கப்பட்டது