பக்கம்:கங்கா.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கங்கர இன்னொரு தாவு தாவி-சங்கிலியை மாட்டிக் கோர்த் திருந்த தாழ்ப்பாளுடன் கதவே பெயர்ந்துவிடும் போல் கிடுகிடுத்தது-முன் கால்களால் சுரண்டிப் பிராண்டி இன்னும் கிட்ட இழுத்துக் கொண்டது. அதற்குள் அதற்கு அவசரம் தாங்கவில்லை. "தோலின் தொடைப் பக்கம் கிழித்துக் கடிக்க ஆரம்பித்தது. காது வரை அதன் உதடுகள் மடிந்து கடைவாய்ப் பற்கள் வெளிறிட்டன. பிடித்தக் கடியை விடாது, தலையை உதறிக் கொண்டு பற்களினிடை யிலிருந்து உறுமுகையில் அதன் கண்கள் வெறியில் மங்கிப் பளபளத்தன.” இந்த ஆளுக்குக் கதை சொல்லும் வன்மையுடன் அவன் ஜார வேகமும் சேர்ந்தோ ஏனோ அவன் சொல்லில் வசியமிருந்தது. அவன் விவரிக்கும் காகஷி கண்முன் படிப்படியாய் எழுகையில் அதனுள் என்னையும் இழுத்துக் கொண்டிருந்தான். என்னையறியாமல் அதில் என் இழைகளும் பாய ஆரம்பித்தன. குவளையுள் பால் உயர்ந்து கொண்டே நுரை மேல் பால் பீறல்கள் மெத்து மெத்தென வீழ்ந்தன. தோல் கன்றிலிருந்து வைக்கோல் பிரிகள் பிய்ந்து தரையில் சிந்தின. பசுவின் கண்களிலிருந்து தாரைகள் பெருகி வழிந்தன. கன்றுக்குட்டியின் முகத் தோலில் என் முகம் பொருந்தினாற் போல் இருந்தது. பசு முகத்தில் அப்பா முகத்தைக் கண்டேன். அப்பாவின் கண்களிலிலிருந்து மெளனமான கண்ணிர் தாரை தாரையாய் வழிந்தது. அப்பாவுக்கு ஏற்கெனவே கண்ணில் கோளாறும் உண்டு. "ராமா” என்று அப்பா என்னைக் கூப்பிடும் போதே அவர் குரல் அப்படி நெகிழும். அவருக்கு என் மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/182&oldid=764362" இலிருந்து மீள்விக்கப்பட்டது