பக்கம்:கங்கா.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிண்ணங்கள் "இந்தாங்கோ அப்பா, உங்களுக்குப் பிடிக்கிற வஸ்து ஒண்ணு." கையுள் திணித்த கிண்ணத்தை விரல்கள் தடவு கின்றன. வயல்வெளியில், முற்றிய நெற்கதிர்களின் மேல், மாலைக் காற்றின் விதிர்விதிர்ப்புப் போல் விரல் நுனிகள் எதையோ அடையாளம் கண்டுகொண்டு பரபரப்பில் நடுங்குகின்றன. "இது இந்த வீட்டுப் பண்டம் போலிருக்கிறதே (" "ஏது, அப்பாவுக்கு இதெல்லாம்கூடத் தெரிகிறதே ! இது உங்களதேதான். என் சாந்திக் கல்யாணத்துக்கு அம்மா பாலிஷ் போட்டு புதிசு பண்ணிக் கொடுத்தது! எனக்கே மறந்து போச்சு; எத்தனை நாளாளச்சு! ஊருக்குக் கிளம்பும் வேளைக்குப் பழம்பெட்டியைக் குடைந்தேன்; கிடைத்தது. வீட்டில் கொள்ளையா இறைஞ்சு கிடக்கும் சாமான்களில் இது யாருக்குப் பொருட்டு ?” - விரல்கள் செல்லமாய்க் கிண்ணங்களைத் தடவு கின்றன. நிறைய நசுங்கல். கொடுத்தபடியே இருக்க முடியுமா ? திரட்டுப் பாலின் மணம் கம்’மென்று எழு கின்றது. தேவலை, அமலிக்கு அவள் வீட்டு உப்பும் தண்ணீரும் ஊறி ஊறி, பேச்சும் அப்படியே படிந்து போயிற்று. இருக்க வேண்டியதுதானே ! வாசலில் ஜட்கா நின்று, பெட்டியும் சாமானும் இறங்குகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/193&oldid=764374" இலிருந்து மீள்விக்கப்பட்டது