பக்கம்:கங்கா.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

கங்கா


அவரவர் கிண்ணங்களில் அவரவர் எண்ணங்கள். எண்ணங்களில் மூழ்கி மூச்சுத் திணறி, ஈப்பேனல் நெளிந்து கொண்டிருக்கிறோம். கண்ட பலன் இதுதானா ? 责 கமலி உள்ளிருந்து வெளிப்படுகிறாள். நேரே என்னிடம் வருகிறாள். - "இப்போது அம்மா என்னிடம் சொன்னார். இவை களை உங்களிடம் சேர்த்து விடும்படி.." கிண்ணங்களை என்னிடம் கொடுக்கிறாள். அந்தக் க ண ேம கிண்ணங்களிலிருந்து என் விடுதலையை உணர்கிறேன். கிண்ணங்களின் எண்ணங்களின் அழுத்தலினின்று என் மீட்சியை உணருகிறேன். அவைகளைத் துர வீசி எறிகிறேன். ஒன்றன்பின் ஒன்றாய் அவை குறட்டுக் கல்லில் பட்டுத் தெறித்து விழும் ஒலி, இருளில் இனிக் கின்றது. விலங்கின் தெறிப்பைப்போல். கமலியின் கன்னங்களை என் கைகளால் தொடு கிறேன். என் கன்னங்கள் திடீரெனச் சில்லிடுகின்றன. கண்ணிரின் ஆசி இன்னதென்று இப்போதுதான் புரிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/214&oldid=1283385" இலிருந்து மீள்விக்கப்பட்டது