பக்கம்:கங்கா.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

199


அம்மாவின் மோனம், உடையாத கட்டிபோல் விண்விண் என வீடு முழுதும் விறுவிறுக்கின்றது. பகை செதுக்கிய முகத்தின் வார்ப்பு நாளுக்கு நாள் இறுகு கின்றது. அவளால், படிதாண்டிய மருமகளை மன்னிக்க முடியவில்லை. அன்பின் தராசு எவ்வளவு நம்பத் தகுதி யற்றதாயிருக்கின்றது ! சிலந்தியிழைப் பிசகில் அன்பு பகையாய்த் திரியக் காத்திருப்பதை நினைக்க சிரிப்புக் கூட வருகிறது. இத்தனை முரண்களின் நடுவில் இயற்கை தன் கட்டாயத்தை எங்கள் உடல்மேல் முறித்துத் தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறது. மண்ணில் மலடு இல்லை என்பதை நிருபிப்பது போலும் அமலி தோன்று கிறாள். அவளுக்கு இரண்டு வருடங்களுக்குப்பின் விமலி. பிரசவ அறையிலிருந்து குழந்தையை எடுத்துவந்து அம்மா என்னிடம் காண்பிக்கிறாள். "அம்மா, வீட்டில் பெண்ணில்லா உன் குறையைத் தீர்த்து வைக்க ஒண்ணுக்கு ரெண்டாச்சு, போ” என்கி றேன். "அதுக்கென்ன குறைச்சல் ? ஆனால், குணத்துக்குத் தாயாரைக் கொள்ளாமல் இருக்கணும்.” இம்மாதிரித் தெறிப்பில்தான், வயிற்றுள் வருடக் கணக்காய்க் குமுறும் ஜ்வாலை வெளியே குபீரிடுகையில், துபட்ட நெஞ்சு கருகுகின்றது ஆனால், காரியங்கள் ஏதும் தடைப்படுவதில்லை. அவை ந ைட .ெ ப ற் று க் கொண்டுதாணிருக்கின்றன. கடமைகள் தவறாது நிறைவேறிக்கொண்டுதாணிருக் கின்றன. ஆனால், செயல்களை ஒன்றுடனொன்று இணைத்து அவைகளுக்கு அர்த்தத்தையும் அந்த அர்த்தத்திலிருந்து ஊக்கத்தையும் கொடுக்கும் பரிவுதான் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/213&oldid=1283384" இலிருந்து மீள்விக்கப்பட்டது