பக்கம்:கங்கா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

é}落”。守。莎官。 摩$ நீங்கள் தூங்குகிறீர்களோ ? நீங்கள் உங்கள் உடம்பைக் கீழே சாய்த்து நான் பார்த்து எவ்வளவோ நாட்களாகிவிட்டன. அதை நிறுத்தி விட்டீர்கள். இரவில் நான் கண்ணயரும்போதும், இடையிலோ விடிவிலோ, விழிப்பு வரும் போதெல்லாம் உங்களைப் பார்ப்பேன். அசைவற்று உட்கார்ந்து கொண்டேயிருக் கிறீர்கள். ஒரு சமயம். நாம் ஒரு நந்தவனத்தில் பாழ் மண்டபத்தில் இரவு தங்கியிருக்கிறோம். இரவெல்லாம் சரியான தூக்கம் இல்லை. விடிவேளையில் கண் அயர்ந்துவிட்டேன். எனக்கு விழிப்பு வந்தபோது நன்றாகப் பொழுது புலர்ந்து விட்டது. உங்களைக் காணோம். அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருக்கிறேன். என்றேனும் ஒருநாள் இம்மாதிரி நேர்ந்துவிடும் என்கிற திகில் என் நெஞ்சத்தில் வேரூன்றி விட்டது. ஆனால், பூச்செடிகளுக்கிடையில் வளைந்த பாதை யில் மெதுவாய் நடந்து வருகிறீர்கள். செவ்வானத்தி லிருந்தே, மேகங்களின் படிக்கட்டின் வழி, நீங்கள் இறங்கி வந்திருப்பதாய் எனக்கு ப்ரமை தட்டுகிறது. கண்ணைக் கசக்கிக் கொள்கிறேன். ஒரு சூர்யகாந்திப் பூ, காற்றில் அசைந்து தங்கள் பக்கமாய் தலையை ஆட்டுகிறது. அதன் எதிரில் நீங்கள் தயங்கி நிற்கிறீர்கள். அது அப்பனைக் கண்ட குழந்தை போல் தங்கள் பக்கமாய் சாய்ந்து, இன்னும் பரபரப்பாய் நர்த்தனம் ஆடுகிறது. உங்கள் முகத்தில் புன்னகை தவழ் கிறது. ஒற்றை நாடியாய்-அம்புபோல் நிமிர்ந்த முதுகும், மார்மேல் கட்டிய கைகளும் தகதகக்கும் உங்கள் மேனியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/59&oldid=764438" இலிருந்து மீள்விக்கப்பட்டது