பக்கம்:கங்கா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

剑)的”。孕。贸T。 $# குன்றி, குறுகி, கருகி, சப்பிய தோலாய் வாடி, வதங்கி, சுருண்டு கீழே விழுந்து கிடக்கிறீர்கள். அலறிக்கொண்டே உங்களை வாரி மரத்தின் நிழலுக்கு எடுத்துத் துரக்கிச்சென்று, அங்கு மெதுவாய்க் கிடத்துகிறேன். உங்களுக்கு பிரக்ஞையில்லை, திடீரென ஈ, காக்கை கூட சொல்லி வைத்தாற்போல் அந்தப் பக்கம் கானோம். காற்று கூட அசையவில்லை, ஊமையாய் உங்கள் அருகில் உட்கார்ந்திருக்கிறேன். இந்தச் சமயத்தில் என் உணர்ச்சி எனக்குத் தெரிய வில்லை. நெஞ்சையே ஒழித்துப் பெருக்கித் துடைத்து வைத்திருக்கிறது. வெய்யில் சாய்கிறது. பிற்பகல் மாலையாகிறது. தென்றல் கிளம்புகிறது. இலைகள் சலசலக்கின்றன. ஆகாயத்தில் மேகங்கள் நகர ച്ചriുണ്. என் பார்வை அங்கிருந்து உங்கள் மேல் இறங்கியபோது தங்கள் விழிகள் என்னைச் சிந்தித் துக்கொண்டு இருக்கின்றன. அவைகளில் ஒளி வெகு வேகமாய் மங்கிக் கொண்டிருக்கிறது.உதடுகள் மெதுவாய் அசைகின்றன. அவை மேல் செவியைச் சாய்த்துக் கேட்கிறேன். “... றவாதே-” அவ்வளவுதான்; தங்கள் கருணைக் கண்கள் மூடி விட்டன. குயீரென தங்கள் உடலிலிருந்து தாழம்பூவை யொத்து, ஆனால் அது இலாது, அதனினும் மயக்கமாய், அமானுஷ்யமான பரிமளம் கிளம்புகிறது. . அதை தினைக்கும்போதெல்லாம் இப்பவும் நான் மனக்கிறேன். நீங்கள் மலர்ந்துவிட்டீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/65&oldid=764445" இலிருந்து மீள்விக்கப்பட்டது