பக்கம்:கங்கா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

கங்கா


இந்த உணர்ச்சியிலேயே நெஞ்சடைக்கிறது. இலையில் அன்னத்தை இப்படிக் காணும் ஏற்பாடே ஒரு தனி அழகாயிருக்கிறது. அதில் ஒரு தருமம் தெரிகிறது. சாதத்தைப் பிசைந்தால் கலைந்து விடுமே என்று கலைக்கக் கூட மனம் வரவில்லை. பிற்பகல். மெதுவாக நடந்து கொண்டிருக்கிறேன். சாலையோரத்தில், மரத்தடியில் ஒருத்தி மெய்ம் மறந்து தூங்குகிறாள். அவளுடைய வாயோரம் எச்சில் வழிகிறது. அவள் குழந்தை அ வளி ட ம் விளையாடிக் கொண்டே பால் குடித்துக் கொண்டிருக்கிறான். கொழ கொழவென்ற குழந்தையின் உடலில் பால் வடிகிறது. அவனைப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். என்னைக் கண்டதும் வாயை எடுத்து விட்டுத் திரும்பி என்னைப் பார்த்துச் சிரிக்கிறான். அவனுக்கு இப்போது பால் வேண்டியில்லை. வயிறு முட்டியிருக்கிறது. என் நெஞ்சில் ஏதோ பிராண்டுகிறது. காலையில் கண்ட பூனைக் குட்டிகளா ? எனக்கு, என் மனோவுக்கு என்ன பிறந்திருக்கும் ? பெண்ணா ? பிள்ளையா ? மாலை வருகிறது. அத்துடன் பயங்கள், சந்தே கங்கள், குழப்பங்கள் எல்லாம் கூடவே வருகின்றன. உற்சாகம் முறுக்குத் தளர்ந்து, வேகம் குறைந்து, அடியோடு விழுந்தும் விடுகிறது. மனதில் ஏதோ அலுப்பு தட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/74&oldid=1283295" இலிருந்து மீள்விக்கப்பட்டது