பக்கம்:கங்கா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

曦雷。母。剪”耶。 7i. மங்கையின் குரல் இருட்டில் வெடுக்கென சொடுக் கிற்று. "பார்த்தாயா, பார்த்தாயா கீர்த்தி, மங்கைக்கு வாயில்லை என்றாயே 'ராயணா' என்கிறாள் பார் !" என்னின்று சிரிப்பு பீறிட்டுத் தெறித்தது. மின்னலில் மின்னேரம் இரவு பகலாவதுபோல், நினைவில் மின்னிட்டு உடனே மறைந்த பளிச்சில், என் சிரிப்பு சரம்போல் கேள்வியில் வளைந்து அதன் கொக்கியினடியில் துளித்த சொட்டு தடுத்து இடையில் அறுந்து தொங்கிற்று. மங்கையின் குரலில் ஏன் இவ்வளவு கோபம் ? சாவித்திரி, "நேரமாச்சு, உள்ளே போவோமா ?” என்றாள். பேச்சு இம்சையடைந்து, அந்த அவஸ்தையில் அடங் கின பிறகுதான் நேரம் போனது தெரிகிறது. வெளிக் கதவைத் தாளிட்டுக்கொண்டு உள்ளே வந்ததும் சாவித்திரி உடம்பை சிலிர்த்துக் கொண்டாள். "என்ன சாவித்திரி ?” "சில்லென்றாற் போலிருந்தது." காற்று நடு வாசற்படியிலிருந்து மோதிற்று. அங்கு சென்றேன். "என்ன, கதவை மூடுகிறாயா ?” அப்பாலிருந்து அவன் குரல் வந்தது. அதில் சிந்திய கேலி சுருக்கென்றது, "என் கதவு எப்பவும் திறந்திருக்கும்” என்றேன். “எனக்குத் தெரியும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/85&oldid=764467" இலிருந்து மீள்விக்கப்பட்டது