பக்கம்:கங்கா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

கங்கா


உள்ளும் புறமும் கிடையாதா? அல்ல உனக்கு இல்லை யென்பதன் விளம்பரமா ? "கீர்த்தி, என் பெண்டாட்டி லேசுப்பட்டவள் என்று எண்ணாதே. குரல் தூக்காமல் ஏதாவது குழிபறித்துக் கொண்டிருப்பாள். இன்று என்ன செய்தாள் தெரியுமா ? நடுக்கதவை இரவிலாவது அடைத்தாகணுமாம். ஏன், கூரை வழியாகத் திருடன் இறங்கிவந்து கிட்டுவின் பாலாடையை அழுத்திவிடுவானா ? இல்லை, மூலைப் பழையதை முழுங்கிவிடுவானா ? மங்களத்தம்மாள் சந்தே கங்கள், பயங்கள், எல்லாமே தனி !” -"நேக்குப் பாலாடை மாணாம் நானே தமத்தா குச்சூடுவேன்-”

  • கதவை நாங்களா திறந்து வைத்தோம்?ஏற்கெனவே திறந்திருந்ததுதானே ! தாழ்ப்பாள் எங்கள் பக்கமாயிருக் கிறது? திறப்பதும் மூடுவதும் உங்கள் இஷ்டமா, இவள் இஷ்டமா ?”

"பட்டணத்தில் ராத்திருட்டு ஏது ? எல்லாம் பகலி லேயே, கண்ணெதிரில், கண்ணில் மண்ணைத் துவுவது தான் இங்கைய வழி !” சாவித்திரியின் குரல் எப்படி எப்பவுமே வெல்வெட் போல் இதமாய் செவியில் அமுங்குகிறது தர்க்கத்தை வளர்க்காமல், சமாதானம் பண்ணுவதாய், அதே சமயத் தில் எதிலும் பட்டுக்கொள்ளாமல் வழுக்குகிறது. "ஹா, இரவு பகல் இது வேறே! கண்ணை மூடினால் இருட்டு, திறந்தால் வெளிச்சம். உண்மை தான் ஒளிந்து கொள்ள ஏற்படுத்திக் கொண்ட தோற்றங்கள், புளுகு களில் ஒன்று-இல்லை இரண்டா? அல்ல ஒன்றே இரண்டான ஒன்றா ?” "பட்டப்பகலில் கண் அவிஞ்சாலோ? அது என்ன ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/84&oldid=1283304" இலிருந்து மீள்விக்கப்பட்டது