பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கிய வளர்ச்சி

35


எழுதப் பெற்றனவாகும். இவ்வரிசையில் சிறப்பாகப் போற்றப்படுவதும் முதன்முதலாக அமைந்ததும் சிலப்பதிகாரமேயாகும். அழிந்த சோழர் தலைநகராகிய புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த ஒரு வணிகனைப் பற்றிய கதை இது. ஆனால், இதில் தமிழ்நாட்டு மூவேந்தரும், அவர்தம் நாடும், பண்பும், அரசியல் முறையும், பிறவும் பேசப்படுகின்றன. தனி மனிதன் வரலாற்றை வைத்துப் பல ஆயிரம் அடிகளாலாகிய ஒரு காப்பியமாக்கப்பட்ட இது முதல் காப்பிய நூல். இதை ஒட்டிப் பல பிற காலத்தில் எழலாயின. இவைகளும் சிறந்த இலக்கியங்களாகவே போற்றப்படுகின்றன.

இத்தகைய காப்பியங்களில் வரலாறு மட்டும் அமையாது, நாட்டு நகர அமைப்புக்கள் பற்றிய பல குறிப்புக்களும் இடம் பெறுகின்றன. மூவேந்தர் முதல் சாதாரண இடைக்குலப் பெண் போன்ற பல பாத்திரங்கள் இவற்றால் சித்தரிக்கப்பெறுகின்றன. இவை பெரும்பாலும் கதைப்போக்கில் அமைவனவாம். இவற்றைக் கதையாகவும் நாடகமாகவும் எழுதியும் நடித்தும் வருகின்றனர். சிலப்பதிகாரம் என்ற முதல் காவியத்தை ஒட்டி, அந்தச் செய்யுள் நடையில் இல்லாவிடினும், அன்று தொட்டு இன்று வரை எந்தனையோ எண்ணற்ற காப்பியங்கள் தோன்றிவிட்டன. அவற்றுள் சிறந்தன மக்களால் போற்றப்பட்டு வாழ்கின்றன; மற்றவை இயற்கை முடிவைத் தாமாகவே அடைகின்றன. திருக்குறள் போன்ற அறநூல்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சி வரலாற்றிலே ஒரு திருப்பு மையத்தை உண்டாக்கியது போன்றே, இச்சிலப்பதிகாரமும் ஒரு பெருந்திருப்பு மையத்தைத் தன்னிடத்தே அமைத்துக் கொண்டது என்பது பொருத்தும். சிலப்பதிகாரக் காலம் தொட்டுத் தமிழ் இலக்கியத்தில் பெரும்பாலும் பெருங்காப்பியங்களே உருப்பெற்றன என்னலாம்.

சிலப்பதிகாரத்தோடு சேர்த்தே எண்ணப்படும் மற்றொரு காப்பியம் மணிமேகலை என்பது. இந்த இரண்டை