பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேக்கிழார் தந்த செல்வம்



 

மிழ் இலக்கியத்தில் பழங்காலந்தொட்டே சமயக் குறிப்புக்களும், கடவுளரும், வழிபடுநெறிகளும் பேசப்படினும், அக்காலத்தில் சமய இலக்கியங்கள் தனியாக எழவில்லை என்னலாம். பத்துப்பாட்டில் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படை முருகன் பெருமையைக் கூறுகின்றது. பரிபாடலுள் சில பாடல்கள் முருகன், திருமால் ஆகிய இருவருடைய புகழ் பாடுகின்றன. இவற்றைத் தவிர வேறு தனிப்பேரிலக்கியங்களோ, பெரும்பாடல்களோ கடவுளர் பற்றிச் சங்க காலத்தில் எழவில்லை. நிலத் தெய்வங்களாகத் திருமால், இந்திரன் போன்றவர்கள் குறிக்கப்பெறுகின்றார்கள். ஆனால், கொடி நிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கருதவரும் என்ற தொல்காப்பிய அடி கொண்டு காணின் அவர் காலத்துக்கு முன்னும் கடவுள் உணர்வும், அக்கடவுளை வழிபடும் நெறியும் இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. மற்றும் நீல மணிமிடற்றொருவனாகிய இறைவனைப்பற்றிய குறிப்புக்களும், குன்றம் எறிந்த குமரன் பற்றிய குறிப்புகளும் ஆங்காங்கே சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. அக்காலத்தில் தமிழ் நாட்டில் இன்று காண்பது போன்று பெருங்கோயில்கள் காணப்படாமையான், அவற்றைப்பற்றிய பாடல் களும் வரலாறுகளும் இல்லையாயின. ஏழாம் நூற்றாண்டின்