பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டு மக்களையோ எச்சரிக்கை செய்தார்.””. (இந்தியம் தரிசனம் : நேரு). தாகூர் நேரடியான அரசியல் இயக்கத் திலிருந்து விலகிக்கொண்ட போதிலும்கூட, நாம் அவரது தேசபக்தியையும் சுதந்திர வேட்கையையும் குறைத்து மதிப் பிடுவதற்கில்லை. கவிஞர் என்ற முறையில் மனிதாபிமான உணர்ச்சியோடு இலக்கியப் படைப்புப் படைக்க முனைந்த தாகூர் அதே மனிதாபிமான வேட்கையின் மூலxE!ாகத் தேசம் முழுவதையும் அரவணைத்தார். பாரதியோ தேசி பக்திக் கவிஞராக உருவாகி, அந்தத் தேசபக்தியின் மூலமாகவே மனிதாபிமான உணர்ச்சியைப் பன்முகமான , திருஷ்டி போடும் வளர்த்துக் கொண்டுவிட்டார். ... கங்கை -3