பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில்லை' என்ற கருத்தில் தாகூருக்கும். உடன்பாடு உண்டு என்று மேலே கூறினோம். இதனால்தான் கௌதம புத்தரின் மனிதாபிமானத்திலும், பௌத்தக் கதைகளிலும் ஈடுபாடு கொண்டு, அவற்றைத் தமது பாக்கள் பலவற்றில் கவிப் பொருளாக்கிப் பாடியுள்ள போதிலும்கூட, புத்தர் தமது மனைவி மக்களைத் துறந்து துறவறம் நாடிச் சென்றதைத் தாகூர் ஆதரிக்கவில்லை. இதனை அவர் எழுதிய தோட்டக் காரன்" (மாலி) என்ற கவிதைத் தொகுதியிலுள்ள ஒரு கவிதையின் மூலம் அறியலாம். அந்தக் கவிதைப் பொருள் வருமாறு: “ நடுராத்திரியில் துறவியாகப் போகிறவன் - பின் வருமாறு பேசினான்: | *எனது வீட்டைத் துறந்து கடவுளைத் தேடிப் 4-றப்படு வதற்கு இது தான் சமயம். ஆ! இந்த மாயையில் இங்கு என்னை இத்தனை காலம் பிணித்து வைத்திருந்தது யார்?” . 'நான் தான்' என்றார் கடவுள் . ஆனால் அந்த மனிதனின் காதுகள் அடைபட்டுப் போயிருந்தது, மார்பின் மீது படுத்துறங்கும் குழந்தையோடு அவனது மனைவி படுக்கையின் ஒரு பக்கத்தில் அமைதியாகத், தூங்கியவாறு படுத்துக் கிடந்தாள். ' 'என்னை இத்தனை காலம் முட்டாளாக்கிவிட்ட நீங்க . ளெல்லாம் யார்?' என்று அவன் பேசினான். ' 'அவர்கள் தான் கடவுள்' என்று மீண்டும் அந்தக் குரல் பேசியது. ஆனால் அவன் அதைக் கேட்கவில்லை - , அந்தக் குழந்தை தனது கனவில் அழுது கொண்டே, தாயோடு மேலும் ஒண்டி அரவணைத்துக் கொண்ட்து. - *முட்டாளே! நில், உனது வீட்டை விட்டுச் செல்லாதே” என்று ஆணையிட்டார். கடவுள். ஆனால் அப்போதும் அவன் அதைக் கேட்கவில்லை.