பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெம்மாங்த 55

"வண்டிக்காரன் பாட்டில் என்ன விசேஷக் கருத்து இருக்கப் போகிறது? என்று அலட்சியம் செய்யக் கூடாது ; சிறையில்லாத வான வெளியிலே, பொங்கி உலாவி வரும் அவன் பாட்டில் நாடோடி இலக்கியத்திலே கானும் சுவைகள் எல்லாம் இருக்கின்றன.

வண்டிக்காரனுக்கு உலகம் முழுவதும் வண்டி உலகக் தான். அவனுக்கு உடமானமும், கனவும் வண்டியும் காளையுமாகத்தான் வரும். ஆகவே அவன் பாட்டிலும் வண்டி உருண்டு வருவதைப் பார்க்கலாம். - - -

வண்டிக்காரனுக்கு இப்போது ஹாஸ்ய உணர்ச்சி தோன்றுகிறது. பரிகாசமாகப் பாட்டு வரும் மன நிலை ஏற்பட்டிருக்கிறது. அவனுடைய பிரபஞ்சத்திலே சிரிப் புக்கு இடமாகும். காட்சி இல்லையா? அவன் பாட்டு அந்தக் காட்சியைக் காட்டுகிறது.

வண்டியை ஒட்டத் தெரியாமல் ஒருவன் தத்தளிக் கிருன் வண்டிக்காரன் நல்ல மாடாகப் பார்த்து வாங்கி வண்டியையும் மாட்டையும் ஜாக்கிரதையாகப் பாதுகாக்க வேண்டாமோ? . கண்ணேப்போலப் பாதுகாத்தால்தானே வேண்டிய பாரத்தை ஏற்றிக்கொண்டு போய்க் காசு வாங்கலாம்? இந்தக் காலத்து வண்டிக்காரர்களைப்போல மலேயளவு பாரம் ஏற்றிக் கூலியும் வாங்கிக்கொண்டு மாடு களுக்கு வெறும் தண்ணிரைக் காட்டினல், அந்தத் தொழில் எவ்வளவு நாளேக்கு நடைபெ றும்:

பேராசைக்காரளுகிய ஒரு வண்டிக்காரனைப் பற்றிப் பரிகாசமாக அவன் , மனேவியிடம் சொல்வதுபோல அமைந்திருக்கிறது.தெம்மாங்கு

சின்னச் சின்ன வண்டிகட்டிச்

செவல் மாடு ரெண்டும் பூட்டி வாழைக்காய்ப் பாரம் ஏற்றி

வாராண்டி உன் புருசன் !