பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கடக்கிட்டி முடக்கிட்டி.pdf
3கடக்கிட்டி முடக்கிட்டி பட்டணம்
பார்த்தல்

அந்தக் கிழட்டுக் குதிரை பட்டணத்தைப் பற்றிப் புகழ்ந்து சொன்னதெல்லாம் கடக்கிட்டி முடக்கிட்டியின் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. அதனால் எப்படியாவது பட்டணத்தைச் சுற்றிப் பார்க்கவேண்டுமென்ற ஆசை அதற்கு உண்டாயிற்று. பட்டண வாழ்வுதான் உயர்ந்தது என்று குதிரை சொன்னதும் அதன் மனத்தை விட்டு நீங்கவே இல்லை. அதையும் பார்த்துவிடலாம் என்பது அதன் எண்ணம். பட்டண வாழ்வு நன்றாக இருந்தால் கிழவனை விட்டு அங்கேயே இருந்துவிடலாமல்லவா ?