பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24

காட்டின. அவற்றின் கர்ஜனை கூடாரத்தையே துரக்கி அடிக்கும்படியாக இருந்தது. ஒருவன் சிங்கத்தின் வாய்க்குள் தன் தலையை விட்டுக் காட்டினான். மக்கள் மேலும் மேலும் கைதட்டித் தங்கள் பாராட்டைத் தெரிவித்துக்கொண் டிருந்தார்கள்.

இது முடிந்ததும் கடக்கிட்டி முடக்கிட்டி திடீ ரென்று வட்டத்திற்குள் புகுந்தது. அந்த மிருகங்களுக்குத் தெரியாத ஒரு வித்தையைத் தான் செய்து காட்டவேண்டும் என்று அது துடித்துக்கொண்டிருந்தது. கடக்கிட்டி முடக் கிட்டி நடக்கும்போதே பின்கால்கள் ஒன்றோ டொன்று இடித்துக்கொண்டே, கடக்கிட்டி முடக்கிட்டி, கடக்கிட்டி முடக்கிட்டி என்று சத்தம் உண்டாகுமல்லவா? அது ஒடும்போது அந்தச் சத்தம் இன்னும் நன்றாகக் கேட்கும். அதையே தனது புதிய வித்தைக்கு அது பயன் படுத்திக்கொண்டது.

வட்டத்திற்குள் வந்ததும் அது சுற்றிச் சுற்றி ஓடத் தொடங்கியது. அதன் உடம்பில் இருந்த வர்ணப்பூச்சே ஒரு வேடிக்கையாக அமைந்துவிட்டது. மேலும், கடக்கிட்டி முடக் கிட்டி என்று பின்னங்கால்களில் சத்தம் எழுவ தும் யாரும் இதுவரை கண்டிராத புதிய வித்தையாகத் தோன்றிற்று. இது மிக நல்ல வித்தை என்று மக்கள் தங்கள் ஆசனங்களை விட்டு எழுந்து கின்று, கைதட்டித் தங்கள் பாராட்டை வெளிப்படுத்தினார்கள்.