பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 3

களுக்கு மத்தியில் அது மறைந்து கின்றதால் அதைக் கண்டுகொள்ளவில்லை.

மற்ற விலங்குகளின் கேலிச் சிரிப்பு நிற்கவே இல்லை. 'இந்தக் கழுதைக்கு நம்மைப் போல என்ன வித்தை தெரியும்?’’ என்று இதைக் கொஞ்சங்கட மதிக்காமல் கேலி செய்துகொண்டே இருந்தன.

கடக்கிட்டி மு ட க் கி ட் டி, அவற்றின் கர்வத்தை அடக்க வேண்டும் என்று சமயம் பார்த்துக்கொண்டிருந்தது.

ரிங்மாஸ்டர் வந்து, குதிரைகளையும் மற்ற விலங்குகளையும் அவற்றிற்குத் தெரிந்த வித்தைகளைக் காட்டுமாறு செய்தான். இடை இடையே சர்க்கஸ் கோமாளி வந்து, வேடிக்கை காட்டி. எல்லோரையும் சிரிப்பில் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தைப் பார்த் தாலே சிரிப்பு வரும்படியாக இருந்தது.

குதிரைச்சவாரி, காய்வண்டியில் குரங்குச் சவாரி எல்லாவற்றையும் பார்த்த மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஒரு யானை நாற்காலியில் உட்கார்ந்து, துதிக்கையைத் துரக்கி எல்லோருக்கும் வணக்கம் சொல்லிற்று. மற்றொரு யானை, பெரிய மரப்பந்து ஒன்றன் மேல் கின்று, அதை உருட்டிற்று. பார்த்தவர் கள் எல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

சிங்கம், புலி முதலியவை பாதுகாப்பான இரும்புக்கம்பிகளுக்கு உள்ளிருந்து வித்தை