பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22

என்று கடக்கிட்டி முடக்கிட்டிக்கு ஆசை உண் டாயிற்று. அதனால் அது மெதுவாகக் குதிரை களுக்கும் யானைகளுக்கும் மத்தியில், யார் கண் னிலும் படாமல் போய்ச் சேர்ந்துகொண்டது. டேராவுக்குள் நுழைய இனிமேல் தடை எதுவும் இராது என்று எண்ணி, அது கிம்மதியாகப் பெருமூச்சு விட்டது.

ஆனால், சர்க்கஸ் மிருகங்களெல்லாம் கடக் கிட்டி முடக்கிட்டியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தன.

"உன்னால் எங்களைப் போல வட்ட வடிவ மான அரங்கில் ஒடவும் வித்தைகள் செய்யவும் தெரியுமா? கழுதையே, உனக்கு இங்கு என்ன வேலை?' என்று குதிரைகள் அலட்சியமாகக் கனைத்தன.

கழுதைப்பயலே, என்னைப் போல மரப் பந்தின்மேல் நான்கு கால்களையும் வைத்து அதை உருட்ட முடியுமா?’ என்று கேட்பது போல் யானை உரத்த குரலில் சத்தம் செய்தது.

ஏய் கழுதையே. நாய் வண்டியில் சவாரி போகத் தெரியுமா ? ஒன்றும் உதவாத கழுதைக்கு இங்கு என்ன வேலை?' என்று குரங்கு உர் உர்' என்று சீறிற்று.

இப்படியே எல்லா விலங்குகளும் கடக்கிட்டி முடக்கிட்டியைக் கேலி செய்தன. ஆனால், அது பொறுமையாக இருந்து, தந்திரமாக டேராவுக்குள் நுழைந்துவிட்டது குதிரை