பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34

படியும் மயக்கமடைந்து கிடந்தார்கள். எவனாவது ஒரு திருடன் கொஞ்சம் நினைவு வந்து அசைந்தால் உடனே அவன் பக்கத்தில் சென்று கடக்கிட்டி முடக்கிட்டி உதைக்கும். அதனால் அவர்கள் நால்வரும் போலீஸ்காரர்கள் வரும் வரையில் மயங்கியே கிடந்தார்கள்.

நான்கு திருடர்களையும் விலங்கிட்டுப் போலீஸ்காரர்கள் பிடித்துச் சென்றார்கள். கடக்கிட்டி முடக்கிட்டி மகிழ்ச்சியால் உரக்கக் கத்திற்று. கிழவன் அதைக் கட்டி அணைத்துக் கொண்டான்.