பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40

"எங்களுக்கும் தெரியாது. முயல்கள் சொல்லித்தான் நாங்கள் ஒடுகிறோம்' என்றன மான்கள்.

"எங்களுக்கும் தெரியாது. அதோ அந்தச் சின்ன முயற்குட்டிதான் முதலில் அப்படிக் கத்திற்று' என்று மற்ற முயல்கள் கூறின.

குட்டிமுயல், 'கான் ஒரு பெரிய சத்தத் தைக் கேட்டேன், அதனால் பயந்து பூமி விழுவ தாக கினைத்தேன்' என்றது.

அந்தச் சமயத்தில் மறுபடியும் ஒரு பலத்த இடிமுழக்கம் கேட்டது.

"ஐயோ. பூமி விழுகிறது' என்று அல றிற்று குட்டிமுயல்,

"பார்த்தீர்களா ! இந்த இடியோசையை நாம் எல்லோரும் பல முறை கேட்டிருக்கிறோம். இதனால் பூமி எங்கும் விழுந்துவிடாது. இந்தக் குட்டிமுயல் பிறந்தது முதல் இடியோசையைக் கேட்டதில்லை போலிருக்கிறது. அதனால்தான் பயந்திருக்கிறது. பூமி எங்கேயும் விழுந்து விடாது. யாருமே அஞ்ச வேண்டா என்று கடக்கிட்டி முடக்கிட்டி கம்பீரமாகச் சொல் லிற்று.

உடனே காட்டுவிலங்குகளின் ப ய ம் நீங்கியது. அதனால் அவை கடக்கிட்டி முடக் கிட்டியிடம் அளவில்லாத அன்பு கொண்டன. "நீங்கள்தான் எங்களைக் காப்பாற்றினிர்கள். இல்லாவிட்டால் நாங்கள் ஓடி ஒடியே உயிரை