பக்கம்:கடற்கரையினிலே.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உமறுப் புலவர்

79


அறியவேண்டும் என்பது அவர் ஆசை. அவரடியின் கீழ் அமர்ந்து அறிவுரை கேட்கும் பேறு கடையேனாகிய எனக்கும் கிடைத்தது. ஒருநாள், சாந்தமே உருவாகிய சதக்கத்துல்லாவைக் கண்டேன்; காந்தத்தின் வாய்ப்பட்ட இரும்பு போல் ஆயினேன்; அப்பெருமான் அருளால் நபி நாயகத்தின் மார்க்கத்தை நன்கு உணர்ந்தேன். என் உள்ளத்தில் அவர் திருவாய் மலர்ந்த வசனங்களே நிரம்பி நின்றன. அவற்றை எண்ணுந்தோறும் இன்பத்தேன் என் உள்ளத் தடத்தில் ஊற்றெடுத்துப் பெருகிற்று. அறிவிற் சிறியவனாயினும் ஆர்வத்திற் சிறந்து நின்ற என் நிலையை அறிந்தார் என் குருநாதர்; வாய் திறந்து ஒரு வாசகம் பேசினார். அதை நினைக்கும் பொழுதெல்லாம் என் நெஞ்சம் உருகுகின்றது; கண்களிற் கண்ணிர் பெருகுகின்றது. 'அப்பா ! நபி நாயகத்தின் சேவைக்கு நீ ஆளாகி விட்டாய். அவர் பெருமையைத் தமிழகத்தார் அறியும் வண்ணம் ஒரு பெருங்காவியம் செய்க' என அவர் பணித்தார். உடனே அவர் திருவடியிலே விழுந்தேன்; எழுந்தேன்; நற்றவச் செல்வராகிய அப்பெருமான் திருவடியைச் சிந்தையாரத் தொழுது சீறாப் புராணம் பாடத் தொடங்கினேன். ஐயாயிரம் திருவிருத்தங்களைக் கொண்ட அக் காவியத்தில் ஏதேனும் அருமை இருந்தால்


"நம்மை ஆளுடையான் வேத

நபிதிரு வசனம் தீனோர்

சம்மதித் திடப்பார் எல்லாம்

தழைக்கவே விளக்கம் செய்தோர்

இம்மையும் மறுமை யும்பேறு

இலங்கிய சதக்கத் துல்லா

செம்மலர் அடியி ரண்டும்

சிந்தையில் இருத்தி னேனே"

- சீறாப்புராணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/81&oldid=1248526" இலிருந்து மீள்விக்கப்பட்டது