இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருவள்ளுவர்
7
பெய்யாவிட்டால் இந்நெடுங் கடலும் தன் நீர்மை குன்றுமே ! நீ ஆற்று நீராக வந்து கடலைப் பெருக்குகின்றாய்; ஊற்று நீராகப் பொங்கிக் கடலை ஊட்டுகின்றாய்; மழை நீராகப் பொழிந்து கடலை நிறைக்கின்றாய். ஒரு வழியாகக் கொடுத்துப் பல வழியாக வாங்குகின்ற உபாயமும் இக்கடல் அறியா தொழிந்ததே !
"நெடுங்கடலும் தன்னிர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின்"
என்று நான் பாடியதை நீ மெய்ப்பித்து விட்டாயே !
"மன்னுயிரை வாழ்விக்கும் மாரியே ! உன்னை மனமாரப் போற்றுகின்றேன்; வாயார வாழ்த்துகின்றேன். பாரெல்லாம் புகழும் காரே ! வாழி; ஏழுல கேத்தும் எழிலியே ! வாழி” என்று வாழ்த்திக்கொண்டு தமது மயிலாப்பூர்க் குடிசையின் உள்ளே புகுந்தார் அம்மேதை. மழை கொட்டிற்று.