28
பக்கமாகப் பார்வை எறிந்தார். ‘இது இப்படியே வெகு நேரம் நீடித்திருக்கும்’ என்று சொன்னார்.
வாலிபப் பிராயத்தில் இருக்கிறபோது, ஆபத்து என்கிற உணர்ச்சியிலே உமக்கு லேசில் நம்பிக்கை விழுவதில்லை. ஆகவே, கடலிலே நாசகாரச் சைத்தான்களின் மூச்சு போலக் காற்று சுழன்று நமக்காக ஆயிரம் சவக்குழிகள் பதித்துக் கொண்டிருக்கும்போது, காசு பெறாமலே நமக்காக அதுவே சாமகவியையும் பாடிக்கொண்டிருக்கும் நெருக்கடியான வேளையிலே, உண்மையான கடலோடி ஒருவன் என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நானும் செய்து படகைத் தள்ள முயன்றேன்.
‘அமைதியாக யிரு, கடோ’ என்றார் என் தந்தை. தண்ணீர் தெறிக்கும்படி தலையை ஆட்டிக் கொண்டு சிரித்த வண்ணம் அவர் சென்னார்: ‘நெருப்புக் குச்சிகளை வைத்துக் கடலை நோண்டிக் கொண்டிருப்பதனாலே என்ன பிரயோசனம்? உன் சக்தியை சேமித்து வையப்பா. இல்லையோ, வீட்டிலேயிருப்பவர்கள் உன்னை விருதாவாகத்தான் எதிர்பார்க்க தேரிடும்.’
எங்கள் சிறு படகை பச்சை நிற அலைகள் தூக்கி எறிந்தன, பயல்கள் ஒரு பந்தை உந்துவது போலே. படகின் பக்கங்களில் எகிறிக் குதித்தன ; எங்கள் தலைக்கும் மேலே எவ்வின அவை. உறுமி, வெறித்தனமாய் எங்களை உலுக்கி எடுத்தன. அங்காந்த ஆழக் குழிகளுள் ஆழ்ந்தோம் ஒரு கணம். நெடிய வெண்ணலை முடிகள் மீதுயர்ந்தோம் மறு கணம். தூரத் தூரத் தொலைவிலே வினாவாய்ச் செல்லும் கரை கூட அலைபடும் எங்கள் படகுடன் ஆடி நடமிடுவது போலவே தோன்றும்.
தந்தை என்னிடம் சொன்னார் : ‘நீ திரும்பி விடலாம். ஆனால் நான் மீளப்போவதில்லை. கவனமாய் கேள். மீன் பிடிப்பதைப் பற்றியும், உழைப்பு பற்றியும் நீ தெரிந்து-