பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



35

ஆகவே இவ்வித விஷயங்கள் அவர்களுக்குத் திகைப்பூட்டு வன அல்ல. ஆனுல் அவர்களை இரக்கமும் இனிமையும் நிறைந்தவர்களாக ஆக்கிவிடுகின்றன. அபாயகரமான வாழ்க்கை கடத்தும் மனிதர்கள் எப்போதும் அன்பானவர் களாகவே இருக்கிருர்கள்.

என் தந்தையைப் பற்றி உண்மையில் நான் என்ன் உணர்வுகள் கொண்டிருக்கிறேன், சென்ற ஐம்பத்தோரு வருடங்களாக எனது நெஞ்சிலே நான் சுமந்து நிற்பது தான் என்ன என்பவைகளைப் பற்றி உமக்கு தன்முகப் புரியும்படி என்னுல் தெளிவுபடுத்த இயலவில்லையோ என்து தான் அஞ்சுகிறேன். அதற்கு விசேஷமான வார்த்தைகள் வேண்டும் போலும். வார்த்தைகள் போதாது, இசையே தேவையோ என்னவோ. ஆனுல் நாங்கள், எளிய ஜனக் கள் மீன்களைப் போல்தான். நாங்கள் விரும்புகிற விதத்தில் எங்களால் பேச முடியாதுதான். எவரும் சொல்லல் வெளியிட இயல்வதைவிட சதா உணர்ந்து அதிகமாக அறிந்து கொள்ள முடிகிறது.

முக்கிய விஷயம் இது தான். அவர் என் தத்தை, தனது மாண வேளையிலே கூட, தான் தப்பிப் பிழைக்க முடியாது என அறிந்து அஞ்சாமலிருந்தார்; என்னை - தன் மகனை - அவர் மறக்கவில்லை; நான் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என அவர் கருதிய விஷயம் அனைத் தையும் எனக்கு அறிவிக்க வலிமை பெற்றதுடன், அதற். குரிய காலத்தையும் கணித்து விட்டார். நான் அறுபத் தேழு வருடங்கள் வாழ்ந்து விட்டேன். அன்று அவர் சொன்ன ஒவ்வொன்றும் இன்றுகூட உண்மைதான் என்று நான் கூறமுடியும்."

அந்தக் கிழமனிதன், முன்பு செந்நிறம் பெற்றிருத்து பின் பழுப்பாகி விட்ட பின்னல் குல்லாயைத் தலையிலிருந்து நீக்கி, புகைக் குழாயையும் எடுத்துவிட்டு, வழுவழுப்பான