பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
7
            'இறந் தொழிந்தான் என் நண்பன்;
             இருக்கின்ற என் மனைவி
             ஏனோ அழுகின்றாள்:
             எனக்கேதும் புரியலியே!'
       பின்னால் ஊர்ந்து வரும் பெப்பியின் தோழர்கள் சிரிப்புத் தாங்கமாட்டாமல் அவதியுறுவர். அந்நிய நாட்டான் குவிந்த கண்களைத் திருப்பி அமைதியாகப் பார்வை எறியும் போதெல்லாம் அவர்கள் புதர்களிலோ! சுவரின் பின்னோ! பதுங்கிவிடச் சுண்டெலிகள் மாதிரி விழுந்தடித்து ஓடுவர்.
       பெப்பியைப் பற்றி இத்தகைய உல்லாசக் கதைகள் எத்தனையோ சொல்லலாம்.
       ஒருநாள் ஒரு அம்மாள் தனது தோட்டத்தில் பழுத்த ஆப்பிள் பழங்களைக் கூடை யொன்றில் வைத்து, தனக்குத் தெரிந்த ஒருவரிடம் கொண்டு போய்க் கொடுக்கும்படி அவனே அனுப்பினாள்.
       'உனக்கு ஒரு ஸால்டோ தருவேன். உனக்கே உனக்கு, இஷ்டம் போல் செலவு செய்ய' என்றும் சொன்னாள்.
        உடனே கூடையை எடுத்தான் பெப்பி. தலையில் பதிவாக வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். ஸால்டோ பெறுவதற்கு அவன் சாயங்காலத்திற்கு முந்தி வந்து சோ வில்லை.
        'ஏது, உனக்கு அவசரமில்லை போலிருக்கு' என்றாள் அந்த அம்மாள்.
         பெப்பி பெருமூச்செறிந்து சொன்னான்: 'ஆஹ், என்னருமை வலின்யாரா! நான் ரொம்பக் களைத்துப்போனேன்.'
         * இத்தாலிய நாணயங்களில் ஒன்று.
         * பெண்ணை கெளரவிக்கும் இத்தாலியச் சொல். மிஸஸ், ஸ்ரீமதி என்பது போல இதுவும். 'வலின்யார்' என்பது ஆண்பால்.