பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

துளைத்து அவன் குடல் வெளிவந்துவிட்டது. அவனைக் கடலில் தூக்கி எறிந்தார்கள். அவன் தன்குடலை ஒரு கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டே கரைநோக்கி நீந்தினான். மீண்டும் அவனைப் பிடித்துக் கயிற்றினால் கற்றிக் கட்டிக் கடலுக்குள் எறிந்தார்கள். அவனோ, தன் கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு மீண்டும் குடலை அழுத்திப் பிடித்தபடி கரைநோக்கி நீந்தத் தொடங்கினான். அதன் பின் பல முறை அம்பெய்துதான் அவனைக் கொன்றொழிக்க முடிந்தது. இந்தக் காட்சியைக்கண்ட, கரையில் இருந்த ஒன்றிரண்டு பேர் மூலம் செய்தியறிந்த கரீபியர்கள் கூட்டமாகத் திரண்டு பழிவாங்க ஓடிவந்தார்கள். ஆனால் அவர்கள், கப்பல்களை நெருங்கமுடியாததாலும் கப்பல்கள் நின்ற இடம்வரை எட்டிப் பாயக் கூடிய ஆயுதங்கள் இல்லாததாலும் ஒரு கெடுதலும் செய்யமுடியவில்லை.

கரீபியர்கள் மேலும் திரண்டு உண்மையில் ஒரு போர் மூளும் வரை கொலம்பஸ் காத்திருக்க விரும்பவில்லை. வடதிசை அடிவானத்தை யொட்டிப் பலப்பல தீவுகள் தென்படுவதைக் கண்டு அத்திசையில் தன் கப்பல் கூட்டத்தைச் செலுத்திக் கொண்டு சென்றான். கப்பல்கள் நெருங்கிச் செல்லச் செல்ல மேலும் பல தீவுகள் கண்ணுக்குத் தோன்றின. அந்தத் தீவுகளுக்கெல்லாம் பதினோராயிரம் கன்னிகள் என்று பெயரிட்டான் கொலம்பஸ்.

பலப்பல புதிய தீவுகளைக் கண்டுபிடித்து. அவற்றிற்கெல்லாம் புதுப்புதுப் பெயர்கள் வைத்துக் கொண்டு கடைசியில் தான் முதற்பிரயாணத்தில் கண்டுபிடித்த இஸ்பானியோலாவை யடைந்தான் கொலம்பஸ். கப்பலில் கூடவந்த சிவப்பு இந்தியன் ஒருவன் அதை அடையாளங் கண்டு கொண்டு, தன் சொந்த ஊர் இருக்கும் சாமனா வளைகுடாவிற்கு வழிகாட்டினான். அங்கு கரைபிடித்தவுடன்,