பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷3全 எல்லாவற்றையும் விட்டுத் தொலைத்துவிடலாமென்று அவள் நினைத்தாள். வீட்டுக்குப் போனுல் அங்கே மின்சார விசிறி கிடையாது; குளிர்ந்த தண்ணீரும் கிடையாது; அழலாம் என்ருல்கூட தனியாக இருக்க இடம் கிடையாது. அவள் தந்தை சில திரைகளைக் கொண்டு ஒருமாதிரி ஏற் பாடு செய்திருந்தார்; அவ்வளவுதான். அவள் தந்தைக்காக அல்லாமற்போளுல் அவளால் தொடர்ந்து அந்த வேலை யைச் செய்திருக்க முடியாது. தகரத்தால் கூரை யமைத்த அந்த எளிய சிறு காரியாலயத்தை விட்டுத் திரும்பிய போதும், அல்லது நீர்ப்பாசன வேலையிலிருந்து பெரும் பாலும் புழுதிபடிந்து வரும்போதும் அது ஒன்றுதான் அவருக்கு உற்சாகமளித்தது. அப்பொழுது வகுப்பு எப்படி கடந்ததென்று அவர் அவளைக் கேட்பார். லட்சுமி சொல்வதைக் கேட்டுவிட்டு அவள் மேலும் என்ன செய்ய லாம் என்று யோசனை சொல்லுவார். அவளுடைய தாயிடம் பெண்கள் வந்து தங்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க முடியுமாவென்று முதலில் கேட்டார்கள். ஆனல் அவள் தாய் மிகவும் சோர்வுற்றிருந்தாள். வயதான வேலைக் காரி யொருத்தி இருந்தும் குடும்பக் காரியங்களே கவனிக்க அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இங்கு எல்லாமே மாறிவிட்டது. அவள் தாய் முன்பெல்லாம் வேலை செய்ததே கிடையாது; அவளுக்கு வேலை யாராகிலும் செய்யக்காத் துக்கொண்டிருந்தனர். இந்த மாறுதலை அவளால் தாங்க முடியவில்லை. கிராமப் பெண்களுடன் சேர்ந்துகொண்டு செல்வதை சரஸ்வதி விரும்பினுள்; ஆனல் அவள் தாய்க்குத் தோழிகள் யாருமில்லை. லட்சுமிக்கோ? அவளுக்குத் தோழிகள் இருப்பதாக அவள் எண்ணிக்கொண்டாள். படிப்பிலும், காட்டியத்திலும் திறமை காட்டிய வள்ளியிருக் தாள். பொன்னேரிக்கு மேற்கேயுள்ள ஒரு சிறு கிராமத்து மணியக்காரரின் மகளான மோகினி என்ற வேருெரு