பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 யாரும் பொய் சொல்வதில்லை. கடிதம் கிடைத்தது; ஆனல் பதில் எழுதுவது என் கெளரவத்திற்கு..."என்று இவ்வாறு கடைசியில் சொன்குள். ஜூடி அதைக் கவனிக்கவில்லை. 'என் மேல் உனக்குக் கோபம் இல்லையே?’ என்று கேட்டாள் அவள். 'இல்லவே இல்லை! ஆளுல் இந்தக் கிராமம்-இந்த வாழ்க்கை யெல்லாம் உனக்குத் தெரியக்கூடாது என்று நான் விரும்பினேன்-” என்று கூறினுள் லட்சுமி. 'ஏன், வயது வந்தவர்களுக்கே நீ பாடம் சொல்லிக் கொடுக்கிருய்! இது மிகவும் சிரமமான காரியம்’ என்ருள் ஜூடி. அந்தச் சமயத்தில் அவள் தாய் குறுக்கே பேசத் தொடங் கிள்ை. 'லட்சுமி, இந்த இளைஞர் எங்களுக்கு இன்னும் பலவற்றைக் காண்பிக்க ஆசைப்படுகிருர். யுேம் வரு கிருயா? என்ன இருந்தாலும் இது உங்களுடைய கிராமம்! நீ திரும்பி எங்களுடனேயே தங்கும் விடுதிக்கு வந்து மத்தி யான உணவு சாப்பிடக் கட்டாதா, உங்கள் வீட்டில் சொல்லி விட்டுப் போகலாமா?" லட்சுமி கையால் சைகை செய்து வள்ளியை அழைத் தாள்-அந்தச் சமயத்தில் அவள் அவர்களுக்கு வீட்டைக் காண்பிக்க விரும்பவில்லை. வள்ளி சேதி சொல்லிவிடுவாள்அல்லது அவள் திரும்பிப் போய் கல்ல சேலையாக ஒன்றை, தீபாவளிக்கு வாங்கிய அந்தச் சேலையை உடுத்துக் கொண்டு வந்துவிடலாமா? தலையிலே பூவாவது வைத்துக் கொள்ளலாம் - இதுவரையிலும் அதைப்பற்றி அவள் சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை; ஆனல் இப்பொழுது அவையெல்லாம் அவசியம் வேண்டும்போலத் தோன்றிற்று.