பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#83 வாசனையோடு விறகு எரிந்துகொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு முதலில் சுற்றி ஆராய்ந்து பார்க்கவேண்டு மென்று தான் அவள் விரும்பினுள். மாளிகையைச் சுற்றி அவள் ஓடிவந்தாள். பின்புறத்திலே இரண்டு யானைகள் தங்கள் காதுகளை மெதுவாக ஆட்டிக்கொண்டும், முன்னுல் கிடக்கும் பெரிய குவியலிலிருந்து கற்றை கற்றையாகப் புல்லை எடுக்கத் துதிக்கைகளே கீட்டிக்கொண்டும் இருப் பதை திடீரென்று கண்டாள். அவள் இன்னும் கொஞ்சம் அருகிலே சென்று பார்த்தாள். ஒவ்வொன்றின் கால்கள் இரண்டில் இலேசான கயிற்றைக் கொண்டு கட்டியிருந்தார் கள். அங்குமிங்கும் நடமாடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு கட்டியிருந்தனர். பரந்து வளரும் பெரிய வேப்ப மரத்தின் கீழ் அவை மகிழ்ச்சியோடு கின்றுகொண்டிருக் தன. அவற்றின் முகத்திலே கோலம் தீட்டியிருந்தனர். கோயில் யானைகளைப்போல அவ்வளவு அதிகமாக வர்ணம் தீட்டப்படவில்லை. ஆளுல் இந்து மங்கையர் சிலரைப் போல அவற்றின் கண்களைச் சுற்றிலும் நிறைய மையூசப் பெற்றிருந்தது. அவற்றின் நெற்றியிலே யானையின் ஜாதி யைக் குறிப்பதுபோலச் சிவப்பு நிறத்தில் கட்சத்திரங்கள் இருந்தன. அவற்றின் தலையின் குறுக்காகக் கறுப்பு குல் லாய் போல கன்ருகத் தீட்டியிருந்தனர். ஜூடி பெருமூச்சு விட்டாள்; பெரு முயற்சி செய்து ஹிந்திப் பாடங்களையெல் லாம் நினைவிற்குக் கொண்டுவந்தாள். யானைகளைப் பராமரிப்பவனுக்கு மிகுந்த உற்சாகம் ஏற் பட்டிருப்பதாகத் தோன்றியது. அவன் பல தடவை சலாம் செய்துவிட்டு வளைத்து வளைத்து ஏதோ நீளமாகப் பேசி ன்ை. அந்தப் பேச்சிலே சில வார்த்தைகள் மட்டும் ஜூடிக்குப் பொருள் விளங்கிற்று. இருந்தாலும் அவளுடைய ஹிந்திக்கும் அவனுடைய ஆங்கிலத்துக்கும் இடையே