பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 99 அப்படியிருக்க வேண்டும்மென்றுதான் நீங்கள் விரும்பினர் கன். மேலும் மற்றவர்களைப்போல அவ்வளவு சுலபமாக கான் போய்விடமுடியாது. எனக்கும் இங்கே என் வேலை இருக்கிறது.” ‘'நீ தைரியசாலை. தைரியம் வாய்ந்த என் மகள் .ே ஆளுல் யோசித்துப்பார்-நீ சென்னைக்குத் திரும்பிப்போளுல் மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம், காட்டியப் பயிற்சியையும் தொடர்ந்து செய்யலாம். ஜூடி முதலிய உன் தோழிகளையும் பார்க்கலாம்’ என்ருர் குமார். "அதைப்பற்றியெல்லாம் நான் யோசித்துப் பார்த்தாகி விட்டது” என்று கூறிவிட்டு லட்சுமி தன் தங்தையின் கண் களுக்குள்ளே உற்றுப் பார்த்தாள். பிறகு அவள் ஒரு பேனு வையும் காகிதத்தையும் கொண்டு வந்து அவர் முன்னுல் வைத்தாள். அடிப்பதும் திருப்பி எழுதுவதுமாக அவர் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு மெதுவாகக் கடிதம் எழுதினர். முடிவில் அவர் அங்தக் கடிதத்தை லட்சுமியிடம் தந்தார். 'என் கெளரவத்தை யெல்லாம் போதுமான அளவு விட்டுக் கொடுத்து விட்டேனு-பார்”என்ருர் அவர். அவள் கடிதத்தை முழுவதும் படித்தாள். பிறகு அவள் சரஸ்வதி படுத்திருந்த அறையை கோக்கிப் பார்த்தாள். "அப்பா, திருப்பித் தந்தி அடிக்கும்படியாக எழுதுங்கள். பிறகு நாம் ஒரு வண்டியை வாடகைக்கு அமர்த்தி ரயில் ஜங்ஷனுக்கு இவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு போகலாம். அம்மாவுக்குப் பிரயாணம் செய்து பழக்கமில்லை. ஆனல் பெண்களுக்காக ஏற்பட்ட இரண்டாம் வகுப்புப் பெட்டியில் எல்லோரையும் அனுப்பலாம். ரயிலிலே கார்டிடம் நீங்கள் தெரிவித்துவிட்டால் எல்லாம் சரியாக