பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
41

 நிலைமையைப்பற்றி யாரும் தெரிந்துகொள்ள முடியாது. அவர்கள் சொல்லுவது உண்மையாகவே இருக்கலாம். அப்படியானால் அது எவ்வளவு பயங்கரமானது; அவர்களுக்கு ஒன்றும் கொடுக்கக்கூடாது என்று அவள் தாயார் சொல்லியிருக்கிறாள். “அப்படிக்கொடுப்பது தான் அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கிறது”.

இவ்வாறு சொன்னாலும் அவள் சில வேளைகளில் கொடுக்கத்தான் செய்தாள். முக்கியமாகக் குழந்தையைத் துக்கிக் கொண்டுவரும் பெண்ணைக் கண்டாலும், அல்லது “பெஞ்சமினை அழைத்துக்கொண்டு சென்றிருந்தாலும் அவள் கொடுத்தாள். “பெஞ்சமினுக்கு நான் பல பொருள்கள் வாங்கும் பொழுது அவர்கள் சாப்பிடுவதற்கு ஒன்றுமேயில்லாமலிருப்பது பயங்கரமானது" என்று அவள் ஜூடியிடம் சொல்வாள். ஒன்றுமேயில்லே என்பதை ஜூடியால் முற்றிலும் நாம்ப முடியவில்லை. உண்பதற்கு அவர்கள் வீட்டில் ஏதாவது இருக்கத்தான் இருக்கும். ஒருநாள் துணி துவைக்கும் ஆயாவான வாசுகியின் வீட்டிற்குச் சென்றுவர ஜூடிக்கு அனுமதி கிடைத்தது. மண்ணாலும் தென்னங் கீற்றாலும் ஆன வீடுகள் உடைய சேரி அது. சென்னையில் எங்கெல்லாம் காலியிடம் இருக்கிறதோ அங்கெல்லாம் இப்படிச் சேரியிருக்கும். வாசுகியின் வீடு சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது. தரையிலும் சுவர்களிலும் ஒரு கரையில்லை.ஆனால் தட்டுமுட்டு சாமான்களேயில்லே என்று சொல்லலாம். அவளுடைய தாயும் இரண்டு குழந்தைகளும் வீட்டில் இருந்தார்கள். குழந்தைகள் வெட்கப்பட்டுக்கொண்டு ஜூடியோடு பேசவில்லை. அவர்களுக்குள்ள நல்ல உடைகளை அவர்கள் அணிந்திருந்தார்கள். ஜூடி பெரியவளாகிவிட்டதால் அவளுக்குப் பற்றாதுபோன உடை ஒன்றை வாசுகியின் சின்னப்பெண் அணிந்திருந்தாள்.