பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெஞ்சமினேக் காட்டிலும் அவள் கொஞ்சம் இளையவள். சிறு சதங்கைகளோடு கூடிய பாதசரங்களே அவள் அணிந்திருந்தாள். அவற்ருேடு அவள் மணிக்கணக்காக, விளையாடிக்கொண்டிருப்பாள். கொஞ்ச காட்களுக்குப் பிறகு முதலில் பெஞ்சமினும் பிறகு ஜூடியும் அந்த வீட்டு அம்மானை அவளுடைய பேரப் பிள்ளைகளைப்போலவே அம் மணிப்பாட்டி என்று அழைக்கத் தொடங்கினர். அது அந்த அம்மாளுக்குப் பிடித்தமாக இருந்தது. விரைவிலே அவள் ஜூடியோடு தாராளமாகப் பேசத் தொடங்கினுள். ஒரு காள் தாழ்வாரத்தில் அமர்ந்துகொண்டு அவள் தனது வாழ்க்கையைப் பற்றியே தெரிவித்தாள். "என் தங்தையும் தாயும் ரொம்ப வைதிகமானவர்கள். கானும் அப்படியே வைதிக பிராமணப் பெண் ணுக இருக்க வேண்டுமென்பது அவர்களுடைய விருப்பம். ஆனல் எனக்குப் படிப்பு வேண்டுமென்று ஆசை. கான் அழுதேன்; கூச்சல்போட்டேன். கான் ரொம்பப் பொல்லாத பெண் ணுக இருந்தேன்." இப்படிக் கூறிவிட்டு அவள் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டாள். 'கான் விரும்பியபடியே கல்வி கற் றேன். கல்லூரியில் சேர்ந்தேன. அங்கே ஆங்கில ஆசிரியை ஒருத்தி இருக்தாள்-அப்பா, அவள் எனக்கு எப்படியெல் லாம் உதவி செய்தாள்! எனது தேசத்திற்காகப் பெரிய பெரிய காரியங்களெல்லாம் செய்யவேண்டுமென்று கான் எண்ணியிருந்தேன். அப்பொழுது ஆங்கிலேயர்களாகிய நீங்கள் ஆண்டுகொண்டிருந்த காலம். விடுதலைபெற வேண்டுமென்பது எங்கள் விருப்பம். அது சமயம் கான் ஆங்கிலத்திலுள்ள எத்தனையோ உயர்ந்த புத்தகங்களே யெல்லாம் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு வருஷம் கான் ஆசிரியையாக வேலை செய்தேன். ஆளுல் எங்கள் குடும்பம் மிகவும் வைதிகமானதாகையால் நான் கலியாணம் செய்து