பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பார்த்தாள். யானே உருவங்கள் அச்சடித்த கதர்த்துணி இருக்கிறது .' 'அம்மா, உடம்பெல்லாம் யானைகளாக இருக்க வேண்டுமா ?” என்று கேட்டாள் ஜூடி. அவள் கருத்து என்னவென்று அவளுடைய தங் தைக்குத் தெரியும். கிராமத்திலே கையால் நூற்று கெய்த கதரை அணிந்து கொள்ள அவள் விரும்பவில்லை. இந்தியா விலுள்ள ஏழை மக்களுக்காக இரக்கப்படுகின்றவர்கள் கதரை அணிகிஜர்கள். மிகுந்த ஏழ்மையில் இருக்கும் கிரா மங்களுக்கு அது ஓரளவு பணமும், உணவும் அளிக்கிற தென்று அவர்களுக்குத் தெரியும். இந்திய அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவியிலிருப்பவர்கள் ஆண்களாயினும் சரி, பெண்களாயினும் சரி கதரை அணிகிருர்கள். அது கரடு முரடாக இருக்கும். கதரைப் பற்றி ஒரு பழைய தமாஷ் உண்டு. கற்களே உடைப்பதற்கு வண்ணுன் அதைப் பயன் படுத்துகிருணும். வண்ணுன் தான் துணியை வெளுக் கிறிவன். தண்ணிருக் கருகில் கல்லேப் போட்டுக்கொண்டு அலன் எந்தத் துணியையும் அதன் மேல் ஓங்கி ஓங்கி அடிப்பான். அதனுல் விரிப்புகளும், தலையணை உறைகளும் வெகுநாட்களுக்குத் தாங்கா. எப்பொழுதும் வீட்டிலேயே ஆடைகளைத் துவைத்துக் கொள்வது அவசியம். ஜூடிக்குக் கதர் பிடிக்காது என்பது அவள் தாய்க்கும் தெரியும். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கதரை அவசியம் அணிய வேண்டும் என்பது அவள் எண்ணம். 'கைத்தறிமாளி கைக்குச் சென்று அங்கே என்ன இருக்கிறதென்று பாருங் களேன்? ஜூடிக்கு ஒரு புதிய உடைய வாங்கித்தர நான் தயார்' என்று அவள் தங்தை கூறினர். “ஓ, அது சரி” என்று கூறினுள் 22Τέλια.