பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 சொன்னுல் காளே கின்று அடுத்த காள்வரை ஆகும் என்று தெரிந்துகொள்ளலாம். அதற்கு மேலாகாது. ஒன்றைப் பார்த்து அப்படியே தைப்பதில் அவன் கெட்டிக்காரன்; ஆளுல் ஒரு மாறுதல் செய்ய விரும்பினுல் அவனுக்கு அதிலே திறமை அத்தனையில்லை. சென்ற வேனிற் காலத்திலிருந்ததைவிட இப்பொழுது ஜூடி மூன்றங் குலம் உயரம் அதிகம். சுதந்திர தினம் விடுமுறை நாள். முந்திய காள் மாலே யிலேயே வாத்தியங்கள் முழங்கத் தொடங்கி இரவு முழுவதும் ஓயாமலிருப்பதிலிருந்து அதைத் தெரிந்து கொள்ளலாம். எங்கும் அலங்காரங்கள், பச்சை வெள்ளே சிவப்பு ஆகிய கிறங்களோடும், மத்தியில் ஒரு சக்கரத்தோடுமுள்ள இந்தியக் கொடிகள். இந்தச் சக்கரம் கையால் நூற்கும் ராட்டையின் சக்கரம்; காந்தியடிகள் உபயோகித்த அதே ராட்டைச் சக்கரம், ஊர்வலங்களும், சொற்பெர்ழிவுகளும் இருக் தன. ஒவ்வொருவரும் மற்ற வருக்கு மாலை அணிந்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து 1947 இல் சுதந்திரம் பெற்ற நாளேக் கொண்டாடுவதால் ஜூடியின் தந்தைக்கோ தாய்க்கோ அதில் இடமில்லை யென்று யாரும் கினைத்ததாகத் தெரியவில்லை, சுதந்திரம் கல்லதென்பது தெளிவு. ஜூடியின் தந்தையும் தாயும் கல்லவர்கள். அதஞல் அவர்கள் அதிற்கலங்து மகிழ்ச்சி யடைவார்கள் அல்லவா? ஆஸ்பத்திரியிலே கொடிகளும், பலூன்களும், எழுத்துப் பொறித்த அட்டைகளும் விளங்கின. ஒவ்வொரு வருக்கும் பலமான தேநீர் விருந்து. வாயில் காவலாளிகள், வீடு பெருக்குவோர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் எல்லோருக்கும் இவ்விருந்து கிடைத்தது. அவர்களெல் லோரும் விலைமலிவான அழகிய ஆடைகளை எப்படியோ