பக்கம்:கடல் முத்து.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணியம் ஒன்று 91 காகத்தான் உயிர்தப்பிப் பிழைச்சிருக்கேளுக்கும்! இல்லாங் காட்டி, இந்நேரம் நான் சுருக்குப் போட்டுக்கிட்டுச் செத்து மடிஞ்ச இடத்திலே புல் மண்டியிருக்காதாங்காட்டி?’ தேம்பி ஞன் சக்திவேல். "மச்சான்காரவுகளே! என்ன சொல்லுறிக நீங்க? நீங்க ஏதுக்குச் சாகப் போனிங்களாம்? பாதங்களை மாற்றி நடை பழகியபடி கேட்டாள் அவள். முறைமைப் பெண்ணுன சொந்த அத்தை மகள் பவளக் கொடியை அச்சம் மேலிட்டு மேனி நடுங்கப் பையப் பையக் குனிந்திருந்த தலையை நிமிர்த்தியவகைப் பார்த்தான் சக்தி வேல். பார்த்த கண்கள் குளமாயின. செருமலும் விம்மலும் வெடிக்கின்றன. வெளிமணம் சுக்கலாகப் பொடிக்கத் துடிக்க, உள் மனம் வலிதாங்கமாட்டாமல் தவிக்க, அவன் புத்தி சக்தியோடு பவளக்கொடியை-பாவப்பட்ட, பாவப்படுத்தப் பட்ட பவளக்கொடியை திகில் மேவிய தைரியத்தோடு ஊடுருவுகிருன். பவளப்புள்ளே! ஆதி நாளையிலே உன்னுேட சீமை ஒட்டு வீட்டிலே நீ பொறந்தடியுமே, நீயே தான் எனக்குப் பொண்டாட்டி அப்படின்னு என்னைப் பெத் தெடுத்த ஆத்தாக்காரி ரொம்ப நம்பிக்கையோட சொல்லிப்புட்டாக: அப்பாலே, நீ ஆளான மாசி மாசக் கடுத்தத்திலே நான் முறை மச்சான் உரிமையிலேயும் உறவிலேயும் உலுப்பை, மொய்ப் பணம், பட்டுக் கண்டாங்கி அல்லாத்தையும் கொட்டு முழங்க ஊர்கோலம் வந்து உங்க தலைவாசலிலே வச்சதைக் கண்டுக் கிட்ட உங்க அப்பன்காரர் உனக்கும் எனக்கும் வெரசாவே கண்ணுலம் நடத்திப்புட வேண்டியதுதான் அப்படின்னு உத்தாரம் தந்தாக! ஆளு, என் பாளத்த விதி என்னை நிமிண்டி வேடிக்கை பார்க்க நினைச்சிருந்த துப்பு வெறும் மனுசனை எனக்கு அப்ப மட்டுப்படவே இல்லை! பணப் பசை யோட திமிரிலேயும் சவகாசத் தோஷத்திலேயும் சட்டத் தோட கண்ணிலே கைவீச்சு மண்ணைத் துரவிப்போட்டு நான் கள்ளச்சாராயம் குடிக்க ஆரம்பிச்ச சங்கதி என் ஆசைக் கிளி ஒனக்கும் எட்டிப்பூடும் என்கிற புத்தியே எனக்கு வராமல் பூடுச்சு குடிகார மச்சான நான் கண்ணுலம் கட்டிக்கிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/100&oldid=764944" இலிருந்து மீள்விக்கப்பட்டது