பக்கம்:கடல் முத்து.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கடல் முத்து சக்திவேல் சின்னப்பிள்ளையாக விம்முகிருன். ஆத்தாளே பவளப் பொண்ணே! உன்னை மல்லுக்கட்டி வலுக்கட்டாய மாகக் கெடுத்துப்பூட்ட அந்தப் பாவி மகனை உன்னலே, கடைசிமட்டுக்கும் எந்த வகையிலேயும் இனம் கண்டுக்கிடவே வாய்க்கலையாங்காட்டி?. . . “ என்று வினவின்ை. ஐயையோ...! அந்த இடுசாமப் பேய் இருட்டுப் பொழுதிலே, என்னல எப்படிங்க இனம் கண்டுக்கிட்டிருக்க வாய்க்கும்...? நான் மட்டும் அந்நேரத்திலே தப்பியிருந் தேன்ன, அப்பவே அந்தப் பழிகாரப் பாவியை அங்கேயே கடிச்சுக் குதறிப் பத்திரகாளியாய் அவனுேட இளரத்தத்தை உறிஞ்சிக் குடிச்சிருக்க மாட்டேனுங்களா? பிரக்கினை வந்து சுரனே வந்தடியும் துணி முடிச்சுக்களை அவிழ்த்து என்னை விடுவிச்சுக்கிட்டுச் சேலையை மேனியிலே சுத்திக்கிட்டு நாலு பக்கத்திலேயும் அந்த கேடுகெட்ட மிருகத்தைத் தேடி னேனே? அந்தக் குள்ளநரிப் பாவிப் பயலைக் கடைசி வரையி லேயும் என்னலே கண்டுபிடிக்கவே முடியாமல் போயிடுச்சுங் களே, சக்திவேல் மச்சான்காரவுகளே...? அப்பாலேதான், பாவி நான் சுருக்குப் போட்டுக்கிட்டு செத்து மடிய எத்தனம் செஞ்சேனுங்களே? கடைசியிலே, அதுக்குக்கூட வழி கிடைக் காமல் போயிடுச்சுங்களே...? ஐயையோ! ஏளும் என்னைக் காப்பாத்தினிங்க, அம்மான்மகன்காரவுகளே...? நான் மகா ரோசக்காரியாக்கும்! இந்தத் துப்பு உங்களுக்கும் நல்லாவே புரியும்! நானே என்னுேட உசிரைப் போக்கிக்கிட்டாத்தான், பாவி என்னேட மனசு ஆறும்! எங்கிட்டு ஒளிஞ்சு கிடக்குதாம் அந்தப் பாதித் துவாலைக் கிழிசல்? காட்டுக் கத்தலாகக் கத்திக்கொண்டே எதிர்ப்புறம் பாய்ந்தாள் அவள். 'அயித்தை மகளே! அப்படியே நில்லு!’ என்று கெஞ்சிக் கொண்டே, பவளக்கொடியின் கைகளைப் பற்றித் தடுத்துக் கையெடுத்துக் கும்பிடுகிருன் சக்திவேல்! நல்ல காலத்துக்கு நான் இங்கிட்டு அவசியமாவும், அவசரமாவும் வரப்போக, என்னலே உன்னேட உசிரைக் காப்பாத்த வாய்சிச்சு! என் உயிர் இருக்கிற பரியந்தம் இனிமே உன்னைச் சாகவே விடமாட்டேனக்கும்: ஆமா புள்ளே...! நானும் நல்லதுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/99&oldid=765076" இலிருந்து மீள்விக்கப்பட்டது